March 24, 2011.... AL-IHZAN World News
அங்காரா:ரகசிய செயல் திட்டத்தின் அடிப்படையில்தான் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் லிபியாவின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக துருக்கி அதிபர் அப்துல்லாஹ் குல் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக சில நாடுகள் கருதுகின்றன என குல்,எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
முஅம்மர் கத்தாஃபி பதவி விலக வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், கனடா ஆகிய நாடுகள் லிபியாவின் மீது தாக்குதலை தொடுத்துள்ளன. இவர்களின் நடவடிக்கை சிலுவை யுத்தத்திற்கான பிரகடனம் என ரஷ்யாவின் பிரதமர் விலாடிமீர் புடின் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
நேட்டோ படையில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம் நாடு துருக்கி என்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோ கூட்டணி படையினர் லிபியாவில் தாக்குதல் நடத்துவது, சாதாரண மக்களை கொலைச் செய்யவே உதவும் என துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் கூறியிருந்தார்.
RSS Feed
March 24, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment