animated gif how to

ஜப்பான் சுனாமி இலங்கைக்கு வராது!

March 11, 2011 |

March 11, 2011.... AL-IHZAN Local News
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்த சுனாமி அனர்த்தமானது இலங்கையின் எப்பாகத்திற்கும் தாகத்தினை ஏற்படுத்தாது எனவும், அதனால் நாட்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, ஜப்பான் - டோக்கியோ நகரில் ஏற்பட்ட 8.9 ரிச்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்றின் தகவலின் படி ஏற்பட்ட சுனாமியினால் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 12.46 அளவில் 8.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சுமார் 6 மீற்றர் உயரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளதாக டோக்கிய நகரிலிருந்து 400 கிலோமீற்றருக்கு அப்பால் 20 மைல் கடலுக்கு அடியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் ஏனைய பொருட் சேதவிபரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

இதேவேளை, கடந்த இரு தினங்களாக ஜப்பானில் பாரிய நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


News: adaderana

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!