animated gif how to

கடந்த ஆண்டு ஆப்கானில் கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை 2700

March 11, 2011 |

March 11, 2011.... AL-IHZAN World News
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவத்தின் ஆப்கான் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அதிகமான சாதாரண மக்கள்(சிவிலியன்கள்) கொல்லப்பட்டது கடந்த ஆண்டாகும்.

2700 பேர் கடந்த ஆண்டில்(2010) கொல்லப்பட்டதாக நேற்று வெளியான ஐ.நாவின் அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த 2009-ஆம் ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும்.

அமெரிக்கா நடத்தும் ஆளில்லா விமான(ட்ரோன்) தாக்குதல்களைத் தவிர தாலிபான் போராளிகள் நடத்தும் தாக்குதலிலும் சிவிலியன்கள் கொல்லப்படுகின்றனர்.

கண்ணிவெடித் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் குணார் மாகாணத்தில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது நேட்டோ பயங்கரவாதப் படை நடத்திய தாக்குதலில் 9 சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் ஆப்கானில் தீவிர எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

நேட்டோ கமாண்டர் டேவிட் பெட்ரோஸ், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த பொழுது, மன்னிப்புக் கோரல் கொலைகளுக்கு பரிகாரமாகாது என ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் காட்டமாக தெரிவித்திருந்தார்.

குழந்தைகளும், பெண்களும் கொல்லப்படுவது ஆப்கானில் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது என ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது. கூட்டுப் படுகொலையில் 462 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய கொடூர தாக்குதல்கள் ஆப்கான் குடிமக்களை சமூக ரீதியாகவும், மனோரீதியாகவும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

மனிதர்கள் கொல்லப்படுவதை விட மோசமான சூழலாகும் இது என ஐ.நாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!