March 31, 2011.... AL-IHZAN Local News
இலங்கையில் 14ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 1981ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் ஆரம்பமாகவுள்ளது ஒரு சிறப்பம்சமாகும் இதன் கீழ் முதலில் நாடு முழுவதும் காணப்படும் கட்டடங்கள் கணக்கிடப்படுவதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள நிறைவேற்றுப் பணிப்பாளர் சுரங்ஜனா வித்யாரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிவரை இந்த நடவடிக்கை இடம்பெறுவதால் அதிகாரிகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார் விரிவாக 2011ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் மதிப்பீடு என்பன 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளன. இதன்படி கிராம சேவகர்கள் மட்டத்தில் இத்திட்டத்தை முன்னெடுக்க வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment