March 19, 2011.... AL-IHZAN World News
திரிபோலி:எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என லிபியா ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸ்ஸா குஸா இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
லிபியாவில் போர் நிறுத்தத்தை பிரகடனபடுத்திய அவர் ஐ.நா தீர்மானத்தை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குவதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டுமென்ற ஐ.நாவின் தீர்மானத்தை அங்கீகரிப்பதாக லிபியா அறிவித்துள்ளது.
எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் லிபியாவின் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா அனுமதியளித்தது. இச்சூழலில் அமெரிக்க ஆதரவுடன் லிபியாவின் மீது தாக்குதல் நடத்த பிரிட்டனும், பிரான்சும் தயாராக இருந்தன.
இந்நிலையில் கத்தாஃபி போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு தயாராகயிருப்பதாக அறிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment