animated gif how to

இன்று நிலவு பெரிதாக இருக்கும்: பார்க்க மறவாதீர்

March 19, 2011 |

March 19, 2011.... AL-IHZAN Local News

பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு
 இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது. இதனால் 
நமது பார்வைக்கு வழக்கமாகத் தெரியும் அளவை
 விட மிகப் பெரிதாக நிலவு தெரியும். 

பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் 

அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும். அதாவது 3,84,403 கி.மீ. 
அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால்
 பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக
 தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. 

அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு

 தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில்
 இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது. 
இந்த நேரத்தில் வரும் பெளர்ணமி அன்று நிலவு 
மிகச் சிறியதாகத் தெரியும். 

அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது

 (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது.
 இப்படிப்பட்ட நிலைதான் இன்று ஏற்படுகிறது. 
பெளர்ணமி தினமான இன்று நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. 

பூமியில் இருந்து அதனை நாம் காணும் 

தூரம் 2,21,567 மைல்களாக, 
அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. 
இதனால் நிலவு மிகப் பெரியதாகத் தெரியும்.
News:adaderana 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!