animated gif how to

இந்திய வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் எம்.பி,க்களை சந்தித்துள்ளது திட்டக்குழு

March 31, 2011 |

March 31, 2011.... AL-IHZAN India News

மாலேகான்:சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடந்த வாரம் முஸ்லிம் எம்.பி.க்களை திட்டக்குழு சந்தித்துள்ளது.
இது சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்துவற்கு சாதகமான வாய்ப்பாக அமைந்தது என்று பீஹார் காங்கிரஸ் எம்.பி, மவ்லானா அஸ்ரருல் ஹக் கூறியுள்ளார்.
முஸ்லிம் எம்பிக்களை விழாக்களுக்கு அழைத்து மேடையில் எங்காவது ஒரு இடம் கொடுத்தே, இதுவரை தலைவர்கள் இந்திய முஸ்லிம்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
நாட்டின் ஐந்தாட்டு திட்டத்தைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு பல தரப்பு மக்களையும், அமைப்புகளை சந்திப்பதையும், ஆலோசனைகளை கேட்பதையுமே கடமையாக பெற்றிருக்கும் திட்டக்குழு, இதற்கு முன்னால் முஸ்லிம் எம்.பி,க்களை அழைத்து அவர்களின் வாதங்களை விவாதிக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை என்றார்.விரிவாக
அறிக்கைகளை நேரடியாக பிரதமரிடமே கொடுக்கும் திட்டக்குழு 1950, மார்ச் 15-ல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவை தலைவராகக் கொண்டு நிறுவப்பட்டது.
மாநிலங்களவை துணைத் தலைவர் கே.ரஹ்மான் கான் தலைமையில் முஸ்லிம் எம்பிக்களை, திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியா சந்தித்து 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்காக செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்து விவாதித்தார்.
சிறுபான்மையினர் மேம்பாட்டு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும்,
அடித்தட்டு மக்களுக்கும் அது சென்றடையும் விதம் கண்காணிப்பு முறையை நிறுவது குறித்தும் விவாதித்தனர்.
சச்சார் கமிட்டியின் அறிக்கைப்படி, சிறுபான்மையினர் நலன் கருதி முறையான நிதி ஒதுக்கி அது பல்வேறு திட்டங்களுக்காக முறையாக செயல்படுத்தும் அம்சமும் இந்த 12வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் எம்.பி,க்கள் கேட்டுக் கொண்டனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!