November 14, 2010.... AL-IHZAN World News
சிறைக்கைதிகள் மற்றும் உயிர் தியாகிகளின் உறவினர்களான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றப்பட்ட 32 பேரை இஸ்ரேலிய ராணுவம் தடுத்துள்ளது.
ஜோர்டானுக்கும் மேற்குகரைக்குமிடையே அலன்பி பாலத்தில் காவலுக்கு நிற்கும் இஸ்ரேலிய ராணுவத்தினர் புனித யாத்ரீகர்களிடம் திரும்பிச் செல்லுமாறு கூறினர்.
சிறைக்கைதிகள் மற்றும் உயிர் தியாகிகளின் உறவினர்கள் ஹஜ்ஜுக்கு செல்வதை இஸ்ரேலிய ராணுவம் தடுக்காது என இஸ்ரேலிய சிவில் விவகார அமைச்சகம் அறிவித்திருந்தது என ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளுக்கான அமைச்சர் ஈஸா கராகி தெரிவித்துள்ளார்.
பிரச்சனையை பரிசீலிக்க பலரையும் தொடர்புக்கொண்ட பொழுதும் பயனில்லை என அவர் தெரிவித்தார்.
சவூதி ஆட்சியாளரான மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அதில் உட்பட்ட 32 பேரைத்தான் இஸ்ரேலிய ராணுவம் அராஜகமாக தடுத்துள்ளது.
RSS Feed
November 14, 2010
|




0 கருத்துரைகள் :
Post a Comment