November 18, 2010.... AL-IHZAN Local News
பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா வத்தளை ஹுனுபிடிய அக்பர் டவுன் பிரதேசத்தில் அமைத்திருக்கும் ஜும்மாஹ் மஸ்ஜித் ஒன்றினுள் நேற்று மாலை கிரிபத் கொட போலீஸ் OIC உடன் நுலைந்து அங்கு உழ்ஹியா கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்ட 30 வரையான மாடுகளை பலவந்தமாக லாரி ஒன்றினுள் ஏற்றி எடுத்து சென்றுள்ளார் இதை தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று பதட்டம் ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
இந்த விடயம் தொடர்பில் அந்த பிரதேச முஸ்லிம்கள் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான மற்றும் ஆசாத் சாலி போன்றோருடன் தொடர்பு கொண்டனர் இதை தொடர்ந்து விடையம் ஜனாதிபதிக்கு அறிவிக்கபட்டு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பலவந்தமாக பிடித்து செல்லப்பட்ட மாடுகளை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று அறிய முடிகின்றது மேற்படி மாடுகள் அனைத்தும் நாட்டின் சட்ட முறைகளுக்கு அமைவாக உழ்ஹியா கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்டவை என்று அந்த பிரதேச முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
News: Lankamuslim
RSS Feed
November 18, 2010
|




0 கருத்துரைகள் :
Post a Comment