November 11, 2010.... AL-IHZAN Local News
கொழும்பிலும், புறநகர் பகுதிகளிலும் பெய்த அடை மழையின் காரணமாக கொழும்பில் 5500 குடும்பங்களும், மத்திய கொழும்பில் மற்றும் வட கொழும்பில் 30,000 குடும்பங்களும் கம்பஹாவில் 2000 குடும்பங்களும், மேல்மாகணம் மற்றும் கிழக்கில் 5000 குடும்பங்களும் உட்பட 60,000 குடும்பங்களைச் சேர்ந்த 2,00,000 பேர் வரையிலானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கொழும்புக்கு 10 மில்லியன் ரூபா, கம்பஹாவிக்கு 5 மில்லியன் ரூபா மற்றும் களுத்தறையிக்கு 5 மில்லியன் ரூபா என பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுக்கும், அமைச்சு உத்தியோகத்தர்களுக்கும் பாதிப்புக்குள்ளானவர்கள் குறைப்பாடுகளை தீர்க்கும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தங்கும் இடவசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News:-adaderana.lk
RSS Feed
November 11, 2010
|





0 கருத்துரைகள் :
Post a Comment