animated gif how to

ஓ மரணித்த வீரனே உன் ஆயுதங்களை எனக்கு தா

September 16, 2010 |


September 16, 2010
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் வபாத்தாகி அல்லது கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது இவர் 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி ஒன்றில் பயணிக்கும் போது வபாத்தானார்.
இவர் 1986.11.29 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம் சமூக நிறுவனத்தை ஒரு அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து வைத்தார்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் வளர்ச்சி ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் எழுச்சியாகத்தான்  பார்க்க படுகின்றது சரணாகதி அரசியலுக்கு பதிலாக பேரம் பேசும் அரசியல் பலத்தை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பெற்று கொடுத்தது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த முஸ்லிம் வாதிகளும் செய்ய தயங்கிய விடையங்களை அஷ்ரப் துணிவுடன் நடத்தியபோதும் பாராளுமன்றத்தில் அல் குர்ஆன் வசனங்களை முழங்கி இஸ்லாமிய அரசியல் தோற்றத்தை முஸ்லிம் சமூகத்தினுள் காட்ட முற்பட்ட போதும் முஸ்லிம் மக்களின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரு முஸ்லிம் தலைவன் என்ற அந்தஸ்தைப் எம்.எச்.எம்.அஷ்ரப் பெற்றுக்கொண்டார்.
எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையென்பது வெறும் 10 வருடங்கள்தான் 1989 இல் பாராளுமன்ற உறுப்பினரானவர் 2000ஆம் ஆண்டு வபாத்தானார் . இந்த காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு பலமான சக்தியாக ஒன்று திரட்டினார் ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கம் செய்யவேண்டியதை ஒரு முஸ்லிம் அரசியல் வாதியாக மட்டும் இருந்து சாதித்தார் முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு சமூகம் என்பதை அங்கீகாரம் பெறச் செய்தார்.
இவற்றுக்கு இவரின் திறமையை மட்டும் காரணமாக கூறமுடியாது முஸ்லிம்களுக்கு எதிராக உருவாகி இருந்த அந்த சந்தர்பத்தை இவர் மிகவும் சிறப்பாக துணிவுடன் பயன்படுத்தினார் என்றுதான் கூறவேண்டும் அன்றைய காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு தம்மை வழிநடத்தும் தலைவன் ஒருவனுக்காக பிராத்தனை செய்துகொண்டிருந்தது  எலிவலையானாலும் தனி வலை வேண்டும் என்று முஸ்லிம்கள் சிந்தித்து கொண்டிருந்தனர் இவற்றை இஸ்லாமிய இயக்கங்கள் பயன்படுத்த தவறிவிட்டன இஸ்லாமிய இயக்கங்கள் பயன்படுதியிருந்தால் பல முன்னேற்றங்களை இன்று கண்டிருக்கும் இந்த  சந்தர்பத்தை அஷ்ரப் மிகவும் துணிவுடனும் திறமையுடனும் பயன்படுத்திக் கொண்டார் எந்த அரசியல்வாதி துணிவுடன், திறமமையுடனும் முஸ்லிம்களின் உரிமைகளையும் ,தேவைகளையும் ,விருப்பங்களையும் பெற்றுக்கொள்ள போராட முற்பட்டாலும் அவர்கள் அடையும் நிலையைத்தான் அஷ்ரப் அடைந்து கொண்டார்.
1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அஷ்ரப்பைப் பார்த்து பெரும்பான்மை கட்சி முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் ‘இந்த சபைக்குள் நுழைந்த மிக மோசமான மிருகம் நீதான்’ என்று திட்டியுள்ளார்
அஷ்ரப்பை நேசிக்காத அரசியல்வாதிகளை முஸ்லிம் சமூகம் நேசிக்கத் தயாராக இல்லை என்பதை கண்டுகொண்ட பல முஸ்லிம் பெரும்பான்மை கட்சி அரசியல்வாதிகள் பின்னர் அஷ்ரப்பை நேசிப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இவர் தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றும் பல பிளவுகள் மத்தியிலும் வெற்றிநடை போடுகின்றது இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற்றுக்கொண்ட கட்சியாக இன்று வளம் வருகின்றது என்பது சிறப்பானது ஆனால் முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளை பெற்றுள்ளதா? என்பது விவாதிக்கப்படும் விடயமாக இருக்க இந்த கட்சி இஸ்லாமிய கோட்பாடுகளை கொண்ட கட்சியாக இல்லை என்பது இன்று பெரும் விமர்சனமாக உருபெற்றுள்ளது.
ஓ மரணித்த வீரனே உன் ஆயுதங்களை எனக்கு தா உன் சீருடைகளை எனக்கு தா உன் பாதணிகளை எனக்கு தா ஓ மரணித்த வீரனே உனக்கு அல்லாஹ்  மண்ணிப்பும் சுவர்க்கமும் தந்தருள்வானாக.
M.ஷாமில் முஹம்மட்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!