animated gif how to

துருக்கியில் இஸ்லாம் ஆட்சிப் பீடமேற முனைந்து வருகின்றது

September 15, 2010 |

September 15, 2010
துருக்கி உலகளாவிய முஸ்லிம் தலைமைத்துவமான கிலாபத் வீழ்த்தப் பட்ட நாடு அல்லாஹ்வின்இறுதித்தூதர் போதித்த பைஸாண்தியம் கான்ஸ்டான்டிநோப்பிள் போன்ற பிரதேசங்களை தனக்குள் கொண்ட நாடு, இஸ்லாமிய நாகரியத்தை மையங்களாக கொண்டு விளங்கிய பல நகரங்களையும், தேசங்களையும் கொண்ட இஸ்லாமிய சாம்ராகியம்,  இந்த முஸ்லிம் தேசம் இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த நிலை இறுதியில்  1924 ஆம் ஆண்டு துருக்கியில்தான் நிறுத்தப்பட்டது
கடந்த 86 வருடங்களுக்குப் பின்னர் இஸ்லாம் ஆட்சிப் பீடமேற முனைந்து வருகின்றது என்று இஸ்லாத்தின் எதிரிகள் விமர்சிக்கும் நிலை இன்று துருக்கியில் ஏற்பட்டுள்ளது
இன்று அத்தனை அடக்கு முறைகளையும் கடந்து அங்கு இஸ்லாம் எழுச்சி பெற்று வருகின்றது இஸ்லாமிய கோட்பாடுகளை கொண்ட நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development Party- 2007 ஆண்டு நடந்த தேர்தலில் 341 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்து பல சாதனைகளையும் புறிந்துள்ளது நேற்று நடை பெற்ற துருக்கியில் அரசியலமைப்பை மாற்றியமைப்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு முடிவு  அந்த இஸ்லாமியகட்சிக்கு பெரும் வெற்றியை கொடுத்துள்ளது விரிவாக பார்க்க
நாட்டின் இராணுவ ஆட்சிக்கால அரசியலமைப்புத் தொடர்பான மாற்றத்திற்கு துருக்கி மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர் இது இஸ்லாமிய சக்திகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்க்கபடுகின்றது -மதச்சார்பற்ற இராணுவத் துறையில் அரசாங்கம் ஏற்படுத்தி வரும் படிப்படியான மாற்றங்கள் மிக நுணுக்கமானவை. இதற்கு முன்னர் துருக்கியின் மதச்சார்பற்ற சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சிகள் போன்று இனி ஒருபோதும் ஏற்படா வண்ணம் அவற்றை வேரோடு பிடுங்கி வீசக்கூடியவை. இஸ்லாமிய அடிப்படைவாத நிகழ்ச்சி நிரல் ஒன்று அவர்களுக்குப் பின்னால் உள்ளது என்ற மதச்சார்பற்ற எதிர் கட்சி கூக் குரல்களுக்கு மத்தியில் துருக்கிய இஸ்லாமியவாதிகள் மிகப் பெரும் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர் என்று துருக்கிய அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இஸ்லாமிய தலைமைத்துவத்தை கொண்டிருந்த துருக்கியில் 1924 கிலாபத் கலைக்கபட்டதாக அறிவிக்கப்பட் பின்னர் இஸ்லாத்துக்கு எதிரான அத்தனை நடை முறைகளும் அமுலுக்கு வந்தது நாடு பூராவும் அரை நிர்வாண முழு நிர்வாண பெண்களின் நடன விடுதிகள் திறக்கப்பட்டன , அல் குர்ஆன் மொழியான அறபு மொழி முழு அளவில் தடை செய்யப்பட்டது , அறபு கற்க முற்பட்டால் தேச துரோகமாக பார்க்கும் நிலை தோற்று விக்கப்பட்டது , அறபு மொழியில் பாங்கு சொல்வது தடை செய்யப்பட்டது இஸ்லாமிய உடை தடைசெய்யப்பட்டது, எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் என்று சொல் தடை செய்யப்பட்டது அல்லாஹ் என்ற சொல்லுக்கு பதிலாக “தன்றி” -Tanri-என்ற சொல் அறிமுகப்படுத்த பட்டது அல்லாஹு அக்பர் என்று சொன்னதுக்காக பலர் சிறையில் அடைக்க பட்டனர்.
ஆனாலும் இன்று அத்தனை அடக்கு முறைகளையும் கடந்து அங்கு இஸ்லாம் எழுச்சி பெற்று வருகின்றது.
M.ரிஸ்னி முஹம்மட்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!