animated gif how to

செப்.11 ல் குரானை எரிக்கப்போவதாக யு.எஸ். தேவாலயம் அறிவிப்பு

September 08, 2010 |













அமெரிக்க கிறித்தவ திருச்சபையின் பயங்கரவாதம்

அமெரிக்காவின் பிளோரிடா மாநிலத்தில் உள்ள  கிறித்தவ திருச்சபை ஒன்று தான்  புனித அல் குர் ஆன்   பிரதிகளை செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி எரிக்க போவதாக அறிவித்துள்ளது  அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் நினைவு நாளை அல் குர் ஆனை எரிக்கும் நாளாக  அந்த கிறித்தவ திருச்சபை பிரகடனப்படுதி உலகம் முழுவதிலும் வன்முறைகள் தூண்ட காரணமாக அமைத்துள்ளது சுதந்திரம் என்ற பெயரில், அல் குர் ஆன்    அவமதிக்கப்படுவதை மேற்கு  நாடுகள் அனுமதிக்கக்கூடாது என்று ஈரான்  கூறியுள்ளது இதற்கு பலத்த கண்டனங்கள் உலகம் பூராவும் ஏற்பட்டுவருகின்றது.
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு தினமான வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, "சர்வதேச குரான் எரிப்பு தினம்" ஆக கடைபிடிக்கப்போவதாக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அறிவித்துள்ளது.
இரட்டைக் கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக இதனை கடைபிடிக்கப்போவதாக அறிவித்துள்ள அந்த தேவாலயம், இஸ்லாம் ஒரு போலியான மற்றும் சாத்தான் மதம் என்றும் கூறியுள்ளது. 

மேலும் செப்டம்பர் 11 ஆம் தேதியன்று காலை 6 மணி முதால் 9 மணி வரை குரானை எரிக்குமாறு இணைய தளங்கள் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றின் மூலமும் கிறிஸ்தவர்களுக்கு அந்த தேவாலயம் அழைப்பு விடுத்துள்ளது. 
இஸ்லாம் மதம் ஒரு சாத்தான் மதம் என்று நாங்கள் கருதுகிறோம். லட்சக்கணக்கான மக்கள் நரகத்திற்கு போக காரணமாக இருந்தது அந்த மதம்.அது ஒரு போலியான மதம். அது ஒரு வன்முறை மதம் என்பது பலமுறை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" அந்த தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. 
மேலும் அந்த தேவாலயத்தின் ஃபேஸ்புக்கிலும், குரானுக்கான நிரந்தர இடம் நெருப்புதான் என்றும், எனவேதான் அதனை அதற்குரிய இடத்தில் (தீ) வைக்க விரும்புகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் " யூ டியூப்" மூலமும் இதே பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது அந்த தேவாலயம்.
"உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கும் முஸ்லிமை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
அவர்கள் மெக்கா செல்கிறார்கள். அங்குள்ள மசூதியில் ஒன்றுகூடி நிற்கிறார்கள். அவர்கள் அங்கு நிற்பதை பார்க்கும்போது அது ஒரு உண்மையான மத சந்தோஷமாக தெரிகிறதா? 
எனக்கென்னவோ அது ஒரு சாத்தானின் மதமாகத்தான் தெரிகிறது" என்று அதில் கூறியுள்ளார் மேற்கூறிய தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ். 
இதனிடையே ஃபுளோரிடா தேவாலயத்தின் இந்த குரான் எரிப்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. 
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள "த நேஷனல் அசோசியேசன் ஆப் எவான்ஜெலிக்கல்ஸ்(NAE)" என்ற கிறிஸ்தவ அமைப்பு, குரான் எரிப்பு நிகழ்ச்சியை ஃபுளோரிடா தேவாலயம் கைவிட வேண்டும் என்றும், இது உலக அளவில் இரு பிரிவு மதத்தினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறியுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!