animated gif how to

ஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

September 09, 2010 |

September 09, 2010
ஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு இன்று வியாழக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறுகிறது.
நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானிக்கும் வகையில் இன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கேட்டுக்கொண்டுள்ளது . உலகின் பல பாகங்களில் இன்றுடன் 30 நோன்புகள் நிறைவடைகின்றதால் நாளை வெள்ளி கிழமை ரமழான் பெருநாள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது
இலங்கையில் ஏதாவது ஒரு பாகத்தில் தலைப்பிறையை கண்டவர்கள் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கேட்டுக்கொண்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!