animated gif how to

சட்டவிரோத ஒலிபரப்புகளுடன் தொடர்புபட்ட செய்திகளுக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

August 14, 2010 |


இரு வாரங்களுக்கு முன்னர் முன்னர் புத்தளம் , பேருவளை ஆகிய இடங்களில் முஸ்லிம்களினால் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கபடும் சட்டவிரோத ஒலிபரப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன சட்டவிரோதமாக நடத்தப்படும் வானொலி ஒலிபரப்புகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் TRC-மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்த வானொலிகள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை பரப்புவதற்காக தமது சேவைகளை நடத்தி வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட தெரிவித்திருந்தார் அத்துடன் அவை அல்கொய்தாவுக்கு சார்பான மற்றும் அல்- சஹாபப் அடிப்படைவாதக் கொள்கைகளை பரப்பும் நடவடிக்கைகளில் இந்த வானொலிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் இணையத்தள செய்திகள் தெரிவித்தன.
இதை தொடர்ந்து ஆங்கில இணையத்தளங்கள் பல்வேறுவிதமாக தாம் கற்பனை பன்னும் விதமாக எழுத தொடங்கின இதில் ஒரு பத்திரிகை இவ்வாறு செய்தி பதிவு செய்தது -இந்த நாடு புலிகளின் பயங்கரவாதத்தில் இருந்து கடந்த வருடந்துடன் தப்பி இருக்கலாம் . ஆனால் வெளிவரும் ஆதாரங்களை வைத்து மிக மோசமான இஸ்லாமிய அடிபடைவாதிகளால் பிரச்சனைகள் விரைவில் வரலாம் என்று தெரிகின்றது , இலங்கை சந்திக்க போகும் அடுத்த பிரச்சனை இதுதான் – The country may have come out of one of the most difficult conflicts in its history last year, but according to evidence that is surfacing, it could be plunged into a conflict with even more radical Islamic fundamentalists soon என்று அந்த ஆங்கில ஊடகம் கதையை பதிவு செய்தது
இவ்வாறான செய்திகளை ஜம் இய்யத்துல் உலமா கண்டித்துள்ளது முஸ்லிம்கள் மத்தியில் தோன்றும் பிரச்சி னைகளை முஸ்லிம்களே தீர்த்துக்கொள்ள இடமளிக்காது அந்த செய்திகளைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களை உண்டாகும் முயற்சியாகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இதனை கருதுகின்றது என்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற அதன் கூட்டத்தை தொடர்ந்து அதன் பொதுச் செயலாளர் தெரிவிக்கையில் கொடுரமான யுத்தம் முடிவடைந்து நாட்டில் சமாதானம் நிலவும் ஆரோக்கியமான சுழலில் இனங்களுக்கு மத்தியில் பரஸ்பரம் புரிந்துணர்வும் , நல்லிணக்கமும் வளர்க்கபடவேண்டிய இந்த சந்தர்பத்தில் இது போன்ற முயற்சிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிபதாகவும் குற்றவாளிகள் எவராக இருப்பினும் அவர்கள் விசாரிக்க படவேண்டும் என்பதில் மாற்று கருத்துகள் எவருக்கும் இருக்க முடியாது அதே நேரம் ஒரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் மத்தியில் தோன்றும் பிரச்சினைகளை பெரிது படுத்தி முஸ்லிம் மக்களை பொதுவாக அல்லது முஸ்லிம் சமூகத்தில் ஒரு சாராரை பயங்கரவாதிகள் என அடையாப் படுத்த எடுக்கப்படும் முயற்சி தவறானதாகும்
அனுமதி அற்ற ஒலி பரப்பு நிலையங்களுக்கு அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமேயன்றி முஸ்லிம்கள் மத்தியில் அல் கைதா பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் இருகின்றார்கள் என்று கூறப்படுவதை நிதானமாக சிந்திக்கும் எவரும் ஏற்கமாட்டார்கள் மார்க்க விடயமாக ஏற்படும் கருத்து முரண்பாடுகள் சிலவேளை பெரும் பிரச்சனையாக அமைந்திருந்தாலும் அது முஸ்லிம்கள் மத்தியில் இருக்குமேயன்றி அது நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனையாக அந்த வகையிலும் தரவில்லை என்பதை வரலாறு காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!