animated gif how to

கல்முனை ஸாஹிராவில் இருந்து இந்த வருடம் 98 மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைவு

August 14, 2010 |








கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள் அதிகளவு மாணவர்களை சகல துறைகளிலும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது.
இந்த முறை வெளியான க.பொ.த.உயர் தர பரீட்சை முடிவுகளில் 98 மாணவர்கள் பல்கலைகழக நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளனர் இந்த படி பொறியியல்துறை-10, மருத்துவம்-06 , கணித விஞ்ஞானம் துறை-34, விவசாயம்-01, உயிரியல் விஞ்ஞானத் துறை-16 ,முகாமை த்துவம்-05, வர்த்தகம்-15, சமூக விஞ்ஞானத் துறை-11 ஆகிய துறைகளில் மொத்தமாக 98 பேர் தெரிவாகியுள்ளனர்  என்று எமது Lankamuslim.org கல்முனை செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த முஸ்லிம் பாடசாலை இஸ்தாபிக்கபட்டு 61 வருடங்களை எட்டியுள்ளது  இக்கல்லூரியில் கடந்த 61 ஆண்டுகளில் 16000 இற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வெளியேறியுள்ளனர். இதன்  மாணவர்கள் பெரும்பாலும்  இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உயர் பதவிகள் பலவற்றை வகித்து வருகின்றனர் இந்த பாடசாலை கல்முனை பிரதேச முஸ்லிம் பாடசாலையாக இருந்தாலும் இலங்கையின்   18 மாவட்டங்களைச் சேர்ந்த 250 கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்வதோடு இதுவரை 2500 கும் அதிகமான மாணவர்கள் இக் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயின்று வெளியேறியுள்ளனர்.
இந்த பாடசாலை  க.பொ.த.சாதாரண தர,உயர் தர பரீட்சை முடிவுகளில் சிறந்த பெறுபேற்றைப் பெறுவதனால் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயில்வதற்காக நாட்டின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த  மாணவர்கள் கல்வி கற்க  இந்த பாடசாலையை நாடி வருவதுடன்  மிக சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைகழகம் நுழைகின்றனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!