கலாசார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தணிக்கை சபையில் முஸ்லிம் ஒருவரை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னர் இருந்த இணக்க சபையில் முஸ்லிம் ஒருவர் இருந்தார். எனினும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சபையில் எந்த ஒரு முஸ்லிமும் நியமிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கலாசார அமைச்சர் பவித்திர வன்னியாராச்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடிதம் அனுப்பியுள்ளதாக என்.எம்.அமீன் தெரிவித்தார்.
முஸ்லிம் ஒருவர் இணக்க சபையில் நியமிக்கப்படுவதன் மூலம், இலங்கையில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மற்றும் வெளியீடுகளில் இஸ்லாமிய கலாசாரத்திற்கு பொருந்தாத விடயங்கள் இருப்பின் அவற்றை தடுக்க முடியும் என அமீன் தெரிவித்தார் .
0 கருத்துரைகள் :
Post a Comment