animated gif how to

‘பலஸ்தீன் விவகாரம் என்பது ஒவ்வொரு முஸ்லிமுடையதும் பொறுப்பாகும்’- கலாநிதி இக்ராம் ஸப்ரி

August 06, 2010 |

ஆக்கிரமிக்கப்பட்டஜெரூசலம் –கடந்த வெள்ளிக்கிழமை (25.06.2010) பெய்ட் ஸஃபாஃபா நகரின் அல் ஸலாஹ் பிரதேசத்தில் இடம்பெற்ற ஜும்ஆ தொழுகையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொழுகையில் கலந்துகொண்ட ஜெரூசலவாசிகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை தமது வசிப்பிடங்களைத் தகர்த்தும் அபகரித்தும் மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்களைப் பலவந்தமாக வெளியேற்றிவரும் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்குத் தம்முடைய ஒருங்கிணைந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர்..


ஜெரூசலம் இஸ்லாமியக் கவுன்ஸிலின் தலைவர் கலாநிதி இக்ராம் ஸப்ரி தமது ஜும்ஆப் பிரசங்கத்தின்போது, பலஸ்தீன் விவகாரம் என்பது ஒவ்வொரு முஸ்லிமுடையதும் பொறுப்பாகும். ஒரு முஸ்லிம் எந்தச் சூழ்நிலையிலும் அதை விட்டுக்கொடுத்துப் பின்வாங்க முடியாது என்று வலியுறுத்தினார். 
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை பலஸ்தீனர்களின் நிலங்களையும் இருப்பிடங்களையும் பலவந்தமாக அபகரித்து, அவற்றில் சட்டவிரோதக் குடியேற்றங்களை நிறுவிவருவதை அவர் மிகக் கடுமையாகச் சாடினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், பலஸ்தீனர்களைத் தமது பூர்வீக பூமியிலிருந்து  வேரோடு களைந்து, ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்களை மீள்குடியேற்றம் செய்யும் சதித்திட்டத்துடன்  பலஸ்தீன் வீடுகளைத் தகர்த்தல், பலஸ்தீனர்களின் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்தல், பலஸ்தீனர்களை தமது சொந்த இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றுதல், பலஸ்தீனர்களின் நிலங்களை அபகரித்தல் முதலான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானவை என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.
கலாநிதி இக்ராம் அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள், அடாவடித்தனங்களையெல்லாம் கண்டு தளர்ந்துபோய்விடாமல் மனவுறுதியோடு அவற்றை எதிர்கொண்டுவரும் அல் ஸலாஹ் பிரதேச மக்களுக்குத் தமது பாராட்டினைத் தெரிவித்தார்.

பலஸ்தீனரின் வீட்டை இடித்துத் தகர்க்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை






1948 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிரதேசங்களுக்கான அமைப்பின் சிறப்பு அதிதி மற்றும் ஜெரூசலத்தைச் சேர்ந்த பலஸ்தீன் போராட்டக்குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டு பலஸ்தீனர்களின் நியாயமான உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பாகத் தமது ஒருங்கிணைப்பை வெளிக்காட்டுமுகமாக அங்கு வருகைதந்திருந்த  அனைவருக்கும் கலாநிதி அவர்கள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
புனித ஜெரூசல நகரை முற்றுமுழுதாக யூதமயப்படுத்தும் இஸ்ரேலிய சதித்திட்டமானது அந்நகரின் பல பாகங்களிலும் பூர்வீகமாய் வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களைப் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: PIC

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!