animated gif how to

இஸ்ரேல் இந்த மாதம் ஈரானை தாக்கப் போகின்றது:EX CIA,FBI

August 07, 2010 |




மேற்காசியாவில் மீண்டும் ஒரு இராணுவ தாக்குதல் நடக்கப்போவதாக பல அரசியல் ஆய்வாளர்கள்தெரிவித்துள்ள வேளையில் அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை பணிப்பாளர்கள், பொறுப்பாளர்கள் , அதிகாரிகள் இணைந்து ஒபாமாவுக்கு ஒரு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் அதில் இஸ்ரேல இந்த மாதம் ஈரானை தாக்க போகின்றது என்று தெரிவித்துள்ளனர் இந்த மடல் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர்கள் அமெரிக்காவின் முழு ஏற்பாட்டுடன் அனுசரணையுடன் இஸ்ரேல்   இந்த தாக்குதலுக்கு தயாராகிவருவதாக கூறியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இஸ்ரேலின் நடவடிக்கைகள் இப்பகுதியில் மோதலுக்கான சூழலை உருவாக்கி வருகின்றன. சமீபத்தில் லெபனான் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வுடன் ஒரு போர் என்பது தவிர்க்க இயலாதது என இஸ்ரேல் கபினட் அமைச்சர் யோஸி பெலித் கூறியிருந்தார். அதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் இஸ்ரேல சிரியா படைகள் மோதிகொண்டன எப்டியும் அமெரிக்காவை பயன்படுத்தி ஈரானை தாக்கி அடுத்த ஈராக்காக ஈரானை மாற்றுவதுதான் இஸ்ரேலின் கனவு என்பது மேற்கு நடுநிலை அரசியல்ஆய்வாளர்களின்கருத்தாகும்.
இவை இரண்டு நாடுகளும் அணு வள ஆய்வுகளை மேற்கொள்ளும் சக்தி கொண்டவை என்பதுக வனிக்கபடவேண்டும். எனிலும் இஸ்ரேல அணுவாயுதங்களை ஏற்கனேவே தயாரித்துள்ளது. என்று நம்பபடுகின்றது 1945 இல் அமெரிக்கா 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது. அதை தொடர்ந்து 1952 இல் பிரிட்டன் 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சீனா , 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன. இப்போது இஸ்ரேல், வடகொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டுள்ளன என்று நம்பபடுகின்றது.
மின்சாரத்துக்கான ஈரான் அணுச் செறிவாக்கத்தை எதிர்க்கும் மேற்கு நாடுகள் பெரும்பாலும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கின்றன அவற்றை அழிபதற்கு தாம் தாயார் இல்லாத நிலையில் ஈரான் நாட்டின் மின்சார தேவைக்கான அணுச் செறிவாக்கத்தை தடை செய்ய முற்படுகின்றன . அணு ஆயுதம் ஒன்றை வெற்றிகரமாக தயாரித்துள்ள இஸ்ரேல பற்றி இந்த மேற்கு நாடுகள் எதுவும் பேசுவது கிடையாது.
M.ரிஸ்னி முஹம்மட்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!