கொழும்பு கொம்பனித்தெருவில் உடைத்து தகர்க்க பட்ட வீடுகளுக்கு பதில் வீடுகள் கொழும்பு -14 இல் அமைக்க படும் வீட்டு திட்டத்தில் வீடுகள் வழங்க விருப்பதாக அரச சட்டத்தரணி கடந்த திங்கக்கிழமை உயர் நீதிமன்றில் தெரிவித்ததாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிகின்றன.
கொம்பனித்தெருவில் காலாதிகாலமாக குடியிருந்துவந்த மக்களை திடுதிப்பென வெளியேற்றி அக்கட்டிடங்களை கட்டிடம் உடைத்து தகர்க்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன அதனால் உருவான நெருக்கடி நிலையும் விவகாரத்தை நீதிமன்றம் வரை சென்றுள்ளது இந்த கவலைதரக்கூடிய சம்பவத்தை அனைத்து ஊடகங்களும் முழு நாட்டுக்குமே அறிவிக்கத் தவறவில்லை. இச்சம்பவத்தால் ஆத்திரமுற்ற குடியிருப்பாளர்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் மோதினர் ஒரு குடும்பம் வீடில்லாமல் நடுத்தெருவுக்கு வருவதென்பது மிகவும் வேதனை தரக்கூடியதொன்றாகும். எனிலும் இதுவரை இவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகளாக பல வாக்குறுதிகள் மட்டும் கிடைக்க பெற்றுள்ளது என்று விமர்சிக்கபடுகின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment