கல்முனையில் இயங்கிய தேசிய வீடமைப்பு காரியாலயம் அம்பாறைக்கு மாற்றபட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டபாரளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பாராளுமன்றதில் அமைச்சர் விமல் வீர வன்சாவை சந்தித்து இது தொடர்பாக பேசியதில் தேசிய வீ டமைப்பு காரியாலயம் தொடர்ந்தும் கல்முனையில் இயங்கும் என்று உறுதியளிந்துள்ளார் என்று தெரியவருகின்றது நாட்டின் 25 மாவட்டங்களிலும் வீடமைப்பு மாவட்ட அலுவலகங்கள் இருக்கும்போது கல்முனையில் மட்டும் தனியானதொரு அலுவலகம் ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் புதிய நிர்வாகம் பத்து வருடங்களாக இயங்கிவந்த தேசிய வீ டமைப்பு காரியாலயத்தை அம்பாறையுடன் இணைக்க முடிவு செய்தது இந்த தேசிய வீடமைப்பு காரியாலயம் 10 வருடங்களுக்கு முன்னர் முன்னால் கிராமிய வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களினால் திறக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அம்பாறை மாவட்டத்தின் ஒரேஒரு நகரசபையான கல்முனை நகர சபையின் நகர அபிவிருத்தி வேலைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம் ஒன்றை முன்னால் அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஏற்படுத்தியுள்ளார் இந்த அலுவலகத்தையும் அம்பாறை நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்துடன் இணைக்க புதிய நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment