animated gif how to

பல்கலை அனுமதிக்கான தரப்படுத்தல் பாடசாலை அடிப்படையில் இடம்பெற வேண்டும் - ஹக்கீம்

July 27, 2010 |

(மொஹமட் ஆஸிக்)



இந்நாட்டு மாணவ மாணவிகளின் நலனை கருதி பல்கலைக்கழக அனுமதி மாவட்ட ரீதியாகவன்றி பாடசாலை ரீதியாகத் தரப்படுத்துவதே சிறந்தது. பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக மறுபரிசீலனை செய்வது நல்லதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.


கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற பதியுதீன் மஹ்மூத் நினைவு தின வைபவத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பதியுதீன் மஹ்மூத் அவர்களை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்ட இரு பாடசாலைகள் இந்நாட்டில் உள்ளன. ஒன்று தனது முன்னைய தொகுதியான அம்பாறையிலுள்ள கல்முனை மஹ்முத் மகளிர் வித்தியாலயம், மற்றையது தனது தற்போதைய தொகுதியான கண்டியிலுள்ள பதியுதீன் மஹ்மூத் மகளிர் வித்தியாலயமாகும். 
கல்முனையிலிருந்து கடந்த இரு வருடங்களில் 75 ற்கு மேற்பட்டவர்கள் பல்கலைக் கழகம் சென்றுள்ளனர்.இதில் ஐந்து ஆறு பேர் வைத்தியம் இன்னும் பலர் பல்வைத்தியம், விஞ்ஞானம், விவசாயம், சட்டம், கலை, வர்த்தகம், முகாமைத்துவம், பொறியியல், தகவல் ஊடகம், தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளுக்கு அவர்கள் தெரிவாகியுள்ளனர்.

இதற்குக் காரணமும் பதியுதீன் கொண்டு வந்த தரப்படுத்தல் முறையாகும். எம்நாட்டின் பெரும்பான்மை இனம் அங்கு சிறுபான்மையாக உள்ளது. எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை நாமும் அனுபவிக்கின்றோம். அதன் காரணமாக பெருந்தொகையான முஸ்லிம்களும் தமிழர்களும் அங்கிருந்து தெரிவாகின்றனர். 
அதேநேரம் பெரும்பான்மையைப் பொருத்தவரை கண்டிமாவட்டப் பாடசாலைகள் வசதியானவை. எமது பாடசாலைகள் வளப் பற்றாக்குறை கொண்டவை. எனவே கண்டி மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகின்றவர்கள் தொகையைக் கூற எனது வாய் மறுக்கிறது.

எனவே கடந்த இருவருடங்களாக கண்டி  பதியுதீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயத்திலிருந்து தெரிவானவர் தொகையை நான்கூறத் தேவையில்லை. இதிலிருந்து தெளிவாகத் தெரிவது தரப்படுத்தலில் உள்ள குறைபாடுகளாகும். இது மீள்பரிசீலிக்கப்படவேண்டிய ஒன்றாகும் என்றார்.இவ்வைபவத்தில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற அங்கத்தவர்களான ஏ.ஆர்.எம்.ஏ.காதர், எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட மாகாண சபை அங்கத்தவர்கள் பிரதேச சபை அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!