இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேரா, பலஸ்தீனர்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கிறது என, தான் கூறியதாக வெளியான செய்தியினை மறுத்துள்ளார். இலங்கைத் தூதுவர் இத்தகைய கருத்துத்தினை தெரிவித்தாக வெளிவந்த செய்திகளினடிப்படையில், இது இலங்கை முஸ்லிம்களினதும் , பல முஸ்லிம் நாடுகளினதும் உடன் கவனத்தை பெற்றதுடன் அதற்கு பலஸ்தீன- இலங்கை நட்புறவுச் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந் நிலையில், இஸ்ரேலிய பத்திரிகையில் வெளியான செய்தி தவறானது எனவும், தான் அவ்வாறான கருத்துப்பட எதையும் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அப்பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக்கும் இஸ்ரேலிற்குமான உறவு மதிப்பிற்குரியது எனவும், மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் , பலஸ்தீன மக்களின் அபிலாஷைகளை மதிப்பதற்கும், சர்வதேச ரீதியில், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுடன், இரு நாடுகள் எனும் தீர்வொன்றே காணப்பட வேண்டும் என்பதே அணிசேரா நாடுகளின் நிலைப்பாட்டை பின்பற்றும் நாடு என்ற வகையில், இலங்கையின் அதிகாரபூர்வ நிலைப்பாடாடாகவும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேரா, முன்னாள் படைத்துறைக் கட்டளைத் தளபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள் :
Post a Comment