முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்படும்
அநியாயங்களுக்கு எதிராக அமைதியான சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பே இந்த அழைப்பினை விடுத்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில்
முழுநாள் ஹர்த்தாலை அனுஷ்டித்து எமது எதிர்ப்பினை அமைதியான முறையில் வெளியிடுவோம் என
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டியுள்ளது.
'தொடரும் இனவாதத்தை தாங்கிக்கொண்டு இன்னும் தூங்குவதா? ஆமைதியான
ஜனநாயக முறையில் எமது எதிர்ப்பை கட்டுவோம்!' எனும் தொனிப்பொருளிலேயே இந்த ஹர்த்தால்
அனுஷ்டிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான துண்டுப்பிரசுரம் நாடாளவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை
முதல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடளாவிய ரீதியில் எமது வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள்
ஆகியவற்றை மூடி சகல விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி ஹர்த்தாலை அனுஷ்டிப்போம் என
குறித்த துண்டு;ப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவாத கெடுபிடிகளை உடன் நிறுத்து,
முஸ்லிம்களின் வாழ்வியல் கலாசார உரிமைகளுக்கு அசுறுத்தல் விடுக்காதே, சிங்கள் - முஸ்லிம்
சமாதானத்தை சகவாழ்வை சீர்கோலைப்போரை சட்டத்தின் முன் நிறுத்து மற்றும் சட்டத்தையும்
ஒழுங்கையும் நிலைநிறுத்த வேண்டிய அரசாங்கமே கண்ணை மூடிக்கொண்டிருக்காதே ஆகியவற்றை கோரிக்கைகளை
முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment