பிஎல்ஓ எனப்படும்
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகவும் பாலஸ்தீன அதிபராகவும் பதவி வகித்தவர்
யாசர் அரபாத். தனது 75 வயதில் 2003
ஆம் ஆண்டு இறுதியில்
மரணமடைந்தார்.
இஸ்ரேலுக்கெதிரான தனது போராட்டங்களால் கவனம் பெற்ற
அரபாத்த்திற்கு இஸ்ரேல் கடும் தொல்லை கொடுத்துவந்தது. இந்நிலையில் யாசர் அரபாத்தின்
திடீர் மரணத்துக்கு ஏதேனும் வியாதியோ, அல்லது விஷமோ காரணமாக இருக்கலாம் என்று அப்போதே
பேசப்பட்டு வந்தது. பிரேதப் பரிசோதனையில் அவர் உடலில் விஷ பாதிப்பு இருந்தது
தெரியவந்தது. பொலோனியம் கதிர்வீச்சால் அவர் பயன்படுத்திய பொருட்கள்
பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்த நிலையில் அவர் உடலிலும் அந்த கதிரியக்க விஷம் ஊடுருவி இருக்கலாம் என்று
கருதப்பட்டது.
இந்நிலையில், யாசர் அரபாத்துக்கு
காஃபியில் இஸ்ரேலிய உளவாளி விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுவடைந்துள்ளதால் யாசர் அரபாத் உடலை மீண்டும்
தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதன் பொருட்டு, பிரான்ஸைச் சேர்ந்த
இரண்டு நீதிபதிகள் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு அடுத்த வாரம் வருகை தர உள்ளனர். அந்த நீதிபதிகளின் முன்னிலையில் அரபாத்தின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டுமொரு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment