animated gif how to

பல்லின சமூகத்தினர் மத்தியில் ஈத் பெருநாள் சிறப்பு திட்டம்; BrotherHood Movements of Sri Lanka ஏற்பாடு..!

August 20, 2012 |

இலங்கையில் பல்வேறு சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம், சகோதரத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றை வளர்க்குமுகமாக BrotherHood Movements of Sri Lanka அமைப்பினால் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு இனிப்புப் பொதிகளுடன் சிங்கள மொழியிலான இஸ்லாமிய அறிவு சார் நூல்கள் வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று அக்குரனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் BrotherHood Movements of Sri Lanka அமைப்பின் தலைவரும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவருமான முயீஸ் வஹாப்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்.
அங்கு உரை நிகழ்த்திய முயீஸ் வஹாப்தீன்; “எமது நாட்டில் பல்வேறு சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை கட்டி எழுப்புவதற்காக எமது அமைப்பு திட்டமொன்றை வகுத்து செயற்பட்டு வருகின்றது. இதன் பிரகாரமே இந்த நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிச்சயம் வெற்றி அளிக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன்என்று குறிப்பிட்டார்.
இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இனவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் எமது இவ்வாறான முற்போக்கு திட்டங்கள் வெற்றிகரமாக முன் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இது போன்ற நல்லிணக்க நிகழ்வுகளை நாட்டின் பல பகுதிகளிலும் புத்த விகாரைகளில் ஏற்பாடு செய்து அவற்றில் பௌத்த துறவிகளை பங்கேற்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!