எமது
நாட்டில் காவியுடை பயங்கரவாதம் எங்கே உள்ளது என்பதை ரவூப் ஹக்கீம் கூற வேண்டும் என
ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கோரிக்கை
விடுத்துள்ளார்.
பயங்கரவாதத்தை
வெற்றிகரமாக தோற்கடித்த ஜனாதிபதி,
காவியுடை
பயங்கரவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும். அவ்வாறு அரசாங்கம் செய்யுமானால் அது வரவேற்கத்தக்கது.
இருப்பினும் அவர்களது செயற்பாடுகளுக்கு அரசும் உறுதுணையாக உள்ளது என அண்மையில்
ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
அது
தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர்
அத்துரலிய ரத்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர்
தொடர்ந்து தெரிவிக்கையில்,
தனது
சொந்த சமயத்தை கூட முறையாக கடைப்பிடிக்காத அமைச்சர் தான் ரவூப் ஹக்கீம். நாட்டில்
யுத்தம் நடைபெற்ற போது அவர் நோர்வே நாட்டவரையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும்
ஆதரித்து வந்தவர்.
இன மோதல்
பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்பது அவரின் நிலைப்பாடாக
இருந்தது.
தற்போது
நாட்டில் காவியுடை பயங்கரவாதம் உள்ளதென கூறும் அவர், அது எங்கே உள்ளது
என்பதையும் கூற வேண்டும். அதன் பயங்கரவாத செயல்கள் எவை என்பதையும் எமக்கு விளக்க
வேண்டும்.
எனவே
அவர் அர்த்தமில்லாத அறிக்கைகளைக் கூறாது தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும்
என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னர்
யுத்தத்தினை மேற்கொண்டு வந்த அரசு தற்போது மத யுத்தத்தில் இறங்கியுள்ளது. இவை
அனைத்திற்கும் காவியுடையினரே காரணம் தற்போது நாட்டில் காவியுடைப் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது என மனோ கணேசனும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள் :
Post a Comment