animated gif how to

கிழக்குத் தேர்தல்: முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு

July 18, 2012 |


(றிப்தி அலி) -TM
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக, கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.



இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மரம் சின்னத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சினேகபூர்வமான முறையிலேயே தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும்  அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுர் பீடம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
இருப்பினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 12 வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட அனுமதி கோரப்பட்டது.
எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 10 வேட்பாளர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்தே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது. இதனால், கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் மத்திய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும் என அக்கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.
அதேபோன்று, கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!