animated gif how to

பலஸ்தீன தலைவர் யாஸிர் அரபாத் விஷம் கொடுத்து கொலைச் செய்யப்பட்டார்..!

July 04, 2012 |

பலஸ்தீன் தலைவர் யாஸிர் அரபாத்தின் மரணம் கொடிய விஷம் உடலில் செலுத்தப்பட்டு நிகழ்ந்ததாக அல்ஜஸீராவின் புலனாய்வு அறிக்கை கூறுகிறது. ஒன்பது மாதங்களாக நீண்ட புலனாய்வின் இறுதியில் பலஸ்தீனின் புகழ்பெற்ற தலைவரான யாஸர் அரபாத்தின் மரணம் இயற்கையானது அல்ல என்ற உண்மையை அல்ஜஸீரா கண்டுபிடித்துள்ளது.

அரபாத்தின் மரணம் குறித்து அன்றே இத்தகைய சந்தேகங்கள் எழுந்தன. அதனை உறுதி செய்யும் வகையிலேயே அல்ஜஸீராவின் புலனாய்வு அறிக்கை அமைந்துள்ளது.

மருத்துவமனையில் அரபாத் சிகிட்சை பெற்று வந்த வேளையில் உபயோகித்த ஆடைகள், டூத் ப்ரஸ், தலைப்பாகை ஆகியவற்றை சுவிட்சர்லாந்தில் இன்ஸ்ட்யூட் தி ரேடியோ பிசிக்ஸில் கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் ரேடியோ கதிர்வீச்சு சக்தியுள்ள ப்ளூட்டோனியம்தான் அரபாத்தின் மரணத்திற்கு காரணம் என்பது நிரூபணமானதாக புலனாய்வு அறிக்கை கூறுகிறது.

ஆடையில் படிந்திருந்த இரத்தக்கறையிலும் புளூட்டோனியம் கண்டுபிடிக்கப்பட்டது. இது அரபாத்தின் உடலில் உள்ளே புளூட்டோனியம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரம் என அறிக்கை கூறுகிறது.

முன்பு விஷத்தின் தன்மை குறித்து மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. 2004-ஆம் ஆண்டு பெரிய ஆரோக்கிய பிரச்சனைகள் எதுவும் இல்லாத அரபாத் திடீரென உடல் சுகவீனம் அடைந்து பின்னர் மரணமடைந்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!