animated gif how to

எகிப்திய குடியரசின் முதலாவது உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக கலாநிதி முர்ஸி வெற்றி

June 24, 2012 |

எகிப்திய குடியரசின் ஜனாதிபதி தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீனின் ப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ்(FJP) கட்சியின் வேட்பாளரான கலாநிதி முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக எகிப்து தேர்தல் ஆணையம் ‌உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நான்கு தினங்களாக நிலவிய சந்தேகங்களுக்கும், புதிருக்கும் இறுதியில் இன்று பகல் 3.30 மணிக்கு(எகிப்திய நேரம்) தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் எகிப்து ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது.

முஹம்மது முர்ஸி 13.2 மில்லியன் வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷபீக் 12.3 மில்லியன் வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 8 லட்சம் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

6 தினங்களாக ஜனாதிபதி தேர்தலின் முடிவை அறிய காத்து தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்கள் இம்முடிவை அல்லாஹ் அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்ற தக்பீர் முழக்கத்துடன் வரவேற்றனர்.








0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!