ஈரான் மீது இஸ்ரேலால் தாக்குதல்
நடத்தப்பட்டால் அதன்மூலம் பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் நடக்கும் அபாயம் உள்ளது
என்றும் மேலும் டெல்அவிவ் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும்
முன்னால் மொசாத் தலைவர் டகன் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின்
ஒரு சிறிய தாக்குதல் பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் உருவாக காரணம் ஆகும் என்றும்
தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த 5 நிமிடத்தில் போர் ஏற்படும்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டகன்
ஈரான் மீதான தாக்குதல் இஸ்ரேலை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்றும்
இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் திட்டம் 2011 ஆம் ஆண்டின் தேவையற்ற எண்ணம்
என்று கூறியுள்ளார்.
மேலும்
ஈரான் மீது தாக்குதல் தொடுப்பது குறித்த இஸ்ரேலின் பிடிவாதத்தை அந்நாட்டின் ராணுவ
புலனாய்வு துறையைச் சார்ந்த அதிகாரிகளே சமீபத்தில் விமர்சித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
இதனை
மேற்கோள் காட்டி ஈரானின் எழுத்தாளரான டாக்டர். இஸ்மாயில் சலாமி தெரிவித்துள்ளதாவது, “ஈரான் தொடர்பாக இஸ்ரேல்
அரசிற்கும் அதனுடைய ராணுவ புலனாய்வு துறையைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ள
கருத்து வேறுபாடு ஆளும் இஸ்ரேல் அரசை அச்சுறுத்துவதோடு ஈரான் மீது இத்துணை
ஆண்டுகளாக சுமத்தப்பட்டு வரும் குற்றசாட்டுகள் அனைத்தும் போலியானவை என்பதைக்
காட்டுகிறது” என்று
கூறியுள்ளார்.
ஈரான்
அணு ஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும்
ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தப் போவதாகவும் மிரட்டி வருகிறது. இந்நிலையில்
முன்னால் மொசாதின் தலைவர் ஈரான் மீது தாக்குதல் நடந்தால் பிராந்தியத்தில் போர்
மூளும் அபாயம் இருப்பதாக கூறுவது இஸ்ரேலுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள் :
Post a Comment