கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணரின்
கவனயீனத்தால் 21 வயது
இளைஞர் ஒருவர் பரிதாபககரமாக உயிரிழந்த சம்பவம், வைத்தியர்கள்
மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முதலாம் திகதி
வடமராட்சி கிழக்கு பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இவ்விளைஞர் படுகாயமடைந்த
நிலையில், கிளிநொச்சி
பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டு
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு இவருக்கு
சிகிச்சை மேற்கொள்ள முடியாதபோதும் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரத்தக்குளாய் வெடித்தபோதும் வைத்தியர்கள் அதனைக் கவனத்தில்
கொள்ளவில்லை.
தொடர்ச்சியாக அங்கு
சிகிச்சை பெற்றுவந்த இவர் கடந்த 5ஆம் திகதி யாழ்.போதனா
வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு யாழ்.போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது ஏற்கனவே போதிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாமை
காரணமாக இவரது இடது கால் முற்றாக செயலிழந்துள்ள நிலையில், உடனடியாக அது
அகற்றப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்
சிகிச்சைக்கு பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.
இரத்தக்குளாய்
வெடித்திருந்த நிலையில் இவரை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு
மாற்றியிருந்தால் இவரை காப்பாற்றியிருக்கலாம் என யாழ்.போதனா வைத்தியசாலை
வட்டராங்கள் தெரிவித்தன.
கிளிநொச்சியில்
வைத்தியர்களின் கவனயீனமே இவ் உயிரிழப்பிற்கு காரணம் என்றும் அவ்வட்டராங்கள் கவலை
தெரிவித்தன.
மேலும் சம்பவம்
தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு இது தொடர்பில்
சுகாதார திணைக்களமும் விசாரணைகளுக்கு முஸ்தீவு மேற்கொள்வதாகவும் தெரியவருகின்றது.-விடிகுரல்-
0 கருத்துரைகள் :
Post a Comment