கந்துரட்ட
குடை தனியார் கம்பனியானது தனது புதிய தொழிற்சாலையை ஜூன் மாதம் 01ஆந் திகதி நாவலபிட்டியில் திறந்துவைத்துள்ளதுடன்
அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரமுகர்கள்
பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த சம்பனியின் தவிசாளர் திரு. எம்.ரி.எம். நௌஷாட் நாளாந்தம் அதிகரிக்கும் தேவைக்கு ஏற்றவாறு உற்பத்தியை அதிகரிப்பது இந்த புதிய தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான நோக்கம் என்று குறிப்பட்டார்.
கந்துரட்ட உற்பத்திகள் தற்போது மலேசியா, மாலைதீவு மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளை வெற்றி
கொண்டிருப்பதுடன் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் உலகில் உயர்தரத்திலான வர்த்தக
பெயர்களுக்காக தமது உற்பத்திகளை வழங்கிவருகின்றது.
சந்தையில் இருக்கும் ஏனைய பெரும்பாலான உற்பத்திப்
பொருட்களுக்கு போட்டி அடிப்படையிலான இறக்குமதிப் பொருட்கள் தாராளமாக இருந்த
போதிலும் குடை உற்பத்தியில் முன்னணி வகிக்க எம்மால் முடிந்துள்ளது. அதேபோன்று ஏனைய
தேசிய உற்பத்திகளுக்கும் இறக்குமதி பொருட்களுடன் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமென
அவர் தெரிவிக்கின்றார்.
1978ஆம் ஆண்டு எம்.எச்.எம். தாஜூன் அவர்களினால்
ஆரம்பிக்கப்பட்ட கந்துரட்ட நிறுவனம் இன்று எம்.ரி.எம். நௌஷாட் அவர்களின் தலைமையில் மற்றும் எம்.ரி.எம். நௌபல்
அவர்களின் முகாமைத்துவ நெறிப்படுத்தலின் கீழ் இலங்கையில் முன்னோடி உற்பத்தி
நிறுவனமாக விளங்குகின்றது.
உள்நாட்டு குடை உற்பத்தியில் முன்னோடியாக
ஆரம்பிக்கப்பட்ட கந்துரட்ட நிறுவனம் இதுவரை கம்பளை,கெலிஓயா, வெலிகல்ல தொழிற்சாலைகள் ஊடாக எமது நாட்டின்
ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.
நாவலப்பிட்டி புதிய தொழிற்சாலையின் மூலம் 200
பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளது.
உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சர்வதேச
தரத்துக்கு அமைய உற்பத்தி செய்யப்படும் கந்துரட்ட உற்பத்திகள் ISO 9001/2008 சர்வதேச தரச்சான்றிதழையும் உயர்
உள்நாட்டு உற்பத்திகளுக்கான சூர்யசிங்க விருதினையும் பெற்றுள்ளது.
பாவனையாளர்களின் நவநாரீகத்துக்கு ஏற்றவாறு உற்பத்தி
செய்யப்படும் பென்குயின் இலட்சினையைக் கொண்ட கந்துரட்ட குடைகள் பல வடிவங்களில்
சந்தைக்கு வருகின்றன. அது மாத்திரமல்ல கந்துரட்ட நுளம்புவலைகள், மேஸ், பெனியன்
போன்ற உற்பத்திகளும் சந்தையில் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளன. பலதரப்பட்ட தமது
உற்பத்திகளை மேலும் விஸ்தரிப்பது நிறுவனத்தின் நோக்கமாகும்.
தரத்தில் குறைந்த இறக்குமதி செய்யப்பட்ட நுளம்பு
வலைகள் பல சந்தையில் தாராளமாக கிடைக்கின்ற போதிலும் மிகவும் உயர்தரத்திலான
உள்நாட்டு தயாரிப்பான கந்துரட்ட தயாரிப்புக்களை கொள்வனவு செய்வது உள்நாட்டு
உற்பத்திகளை கௌரவிக்கும் செயலாகு மென்று கம்பனி தெரிவிக்கின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment