இஸ்ரேலின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்த தங்களால் இயலும் என்று
ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெற்கு பெய்ரூத்தில் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் மத்தியில்
ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் உரை ஒலிபரப்பப்பட்டது.
அப்பொழுது நஸ்ருல்லாஹ் கூறியது: டெல் அவீவ் மட்டுமல்ல ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன்
பிரதேசங்களில் குறிப்பிட்ட இலக்குகளில் இறைவனின்
கிருபையால் தாக்குதல் நடத்தமுடியும்.
சிரியாவில் பயங்கரவாத சூழல் உருவாக்கியதன் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன. பலஸ்தீனிலும், லெபனானிலும் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு
ஆதரவு அளிப்பதால் சிரியாவில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தலையிடுகின்றன. இவ்வாறு ஹஸன்
நஸ்ருல்லாஹ் கூறினார்.
சிரியாவில் சர்வாதிகார பஸ்ஸாருல் ஆஸாத் அரசு
ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி கொன்றொழிப்பதுக் குறித்து
நஸ்ருல்லாஹ் எதுவும் குறிப்பிடவில்லை
3 கருத்துரைகள் :
இவன் ஹசன் நஸ்ருல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் இல்லை வழி தவறிய ஷியா ஷைத்தான் கூட்டம்
@Irshad நஸ்ருல்லாஹ் வழி தவறிய ஷியா சைத்தானிய கூட்டம் என முகத்தில் எழுதப்பட்டுள்ளதா? இவரது தலைமையில் தான் இஸ்ரேலிய எஹூதி,நசாராக்கள் லெபனானில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர் என்பதை அறிவீர்களா?
islathukku sarpaka peasum oru anniya mathathvary pukalveerkakal.
Islathukku nearukamakavulla vary ikalveerkal.
Sinthiyungal
Post a Comment