animated gif how to

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிபந்தனையுடன் பிணையில் விடுதலை

May 18, 2012 |

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற படைவீரர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றில் சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

பத்து லட்ச ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இருபது லட்ச ரூபா  சரீரப் பிணையிலும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமாயின் நீதிமன்றின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு நாளைய தினம் பொது மன்னிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட முடியாது என்ற காரணத்தினால் இன்றைய தினம், பிணை வழங்கப்பட்டதாக சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!