animated gif how to

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலான சூழலும் அதை தவிர்க்க சில ஆலோசனைகளும்

May 25, 2012 |

-ஹஸான் மூஸா-
இலங்கைத்தீவில் அண்மைகாலமாக இடம்பெறும் சம்பவங்களை அவதானிக்கும் பொழுது மிகவும் அபாயகரமானதும் அச்சமானதுமான ஒரு சூழல் நம்மை நோக்கி நெருங்கி கொண்டிருப்பதை உணரலாம். முற்பது வருட கொடிய யுத்தம் ஓய்ந்து மக்கள் சமாதான காற்றை சுவாசிக்கும் தருணத்தில் ஒரு அணல் கொண்ட காற்று புயலாக மாறிக் கொண்டிருப்பதை காணலாம். விடுதலை புலிகளுக்கு எதிராக பெற்ற வெற்றியின் இருமாப்பில் சில பேரினவாத குழுக்கள் தமது அடுத்த காய் நகர்த்தல்க‌ளை முஸ்லிம்களுக்கு எதிராக நகர்த்த தொடக்கியுள்ள‌ன.

இட்டுக்கட்டப்பட்ட செய்திகள், விளக்கமில்லா விமர்சனங்கள், கடுமையான வாக்குவாதங்கள், இழிவு வார்த்தைகள் என இனவாத கருத்துக்கள் இலங்கை முழுவதும் ஒரு தோற்று நோய் போன்று மிகவும் வேகமாக பறவத் தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையிலேயே அண்மையில் தெகிவளை மத்ரஸா பிரச்சினை , அனுராதபுர சியாரம் உடைப்பு , அம்பன்பொல, தம்புள்ளை, குருநாகல் பள்ளி விவகாரம் போன்ற குழப்ப சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. இன்று இலங்கை முழுவதும் அனைவராலும் பரவலாக பேசப்பட்ட ஒரு விடயம் தம்புள்ள பள்ளி விவகாரமாகும். இது பற்றிய காரசாரமான விமர்சனங்களை ஊடகங்களுடாக‌ இரு சாராரிடமிருந்து அரசியல்வாதிகள், மதகுருக்கள், பிரதேசவாதிகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிந்தது. இருப்பினும் இதன் பின்னனி பற்றி சற்று ஆராயும் பொழுது பாரியதொரு விளைவு எம்மை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது.

அண்மைக்கால நிகழ்வுகளின் பின்னனியில் ஒரு திட்டமிட்ட குழு அரசியல் சக்திகளின் உருதுனையுடன் இயங்கிக் கொண்டிருப்பது நன்கு புலப்படுகிறது. சற்று சிந்தித்து பாருங்கள் பலவருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் தம்புள்ள பள்ளிவாயல் சம்பந்தமாக இவர்கள் சற்றென்று ஆர்பாட்டங்கள் செய்யவதற்கு காரணம் என்ன? ஏன் இதற்கு முன் இப்பிரதேசம் புண்ணிய பூமி என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லையா? சரி விடுங்கள் இப்பிரதேசம் ஆக்கிரமிக்கபட்டதெனில் இதற்காக சட்டரீதியான‌ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடியவில்லையா?

இதன் மர்மம் என்ன? அநுராதபுர பள்ளி உடைப்பு, தெஹிவெள அரபிக் கல்லூரி பிரச்சினை, அம்பன்பொல மற்றும் தம்புள்ள‌ பள்ளி விவகாரம், தற்போது குருணாகள் வாணிவீதி ஆரியசிங்கவத்த‌ பிரச்சினைகள் என கடந்த சில மாதங்களாக பிரச்சினைகள் எம்மை தொடர ஆரம்பித்துள்ளன. இவ்வாறு அண்மைக்காலமாக முஸ்லிகள் தொடர்ந்து தாக்கபடுவதற்கான காரணங்கள் என்ன? அநுராதபுர பள்ளி உடைப்பு மற்றும், தம்புள்ள, களுத்தறை ஆர்பாட்டங்களின் பொழுது இவ்வாறான செயல்பாடுகளில் சில தீவிர எண்ணம் கொண்ட பிக்குகள் மாத்திரமே ஈடுபட்டுள்ளமை கடந்த சில ஆர்ப்பாட்டங்கள் மூலம் உறுதியாகியுள்ளன. ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களும் அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவம் கொண்டவர்களாக இருக்கவில்லை என்பதையும் அவர்கள் வாகனங்கள் மூலம் வெளியூர்களிருந்து வரவளைக்கப்பட்டவர்கள் என்பதையும் கிராமத்தவர்களின் கருத்துக்கள் மூலம் அறியப்பட்டுள்ளன. ஆகவே இதன் பின்னணியில் ஒரு குறிபிட்ட குழுவே இலங்கை முழுவதும் இயங்கிக் கொண்டிருப்பதை நன்கு உணர முடிகின்றது.

இவர்களது செயற்பாடுகாளும் பின்னனியும்

சில பெரும்பாண்மையின அடிப்படைவாதிகள் இன்று மேற்கத்தேயம் தொட்டு உலகம் முழுவ‌திலும் இஸ்லாத்தின் வளர்ச்சியின் மீது கொண்ட காழ்புணர்ச்சியின் காரணமாக இலங்கையில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை கிளரி விடுவதன் ஊடாக, இனரீதியான பாரியதொரு பிரச்சினையை தோற்றுவிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருகின்றனர். இதன் பின்னயில் எனது தேடல்களின் ஒரு சில துளிகள் உங்கள் பார்வைக்கு

அண்மைக்காலமாக சில அடிப்படைவாதிகள் இணையத்தளங்கள் ஊடாக முஸ்லிகளுக்கு எதிராக முன்வைக்கும் மிக பிரதான குற்றச்சாட்டு பௌத்தர்களது வரலாற்று சின்னங்கள் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்க படுவதாகும். இதற்காக இவர்கள் முன்வைக்கும் மிக முக்கிய சான்றுகள் பொத்துவில் முகுது விஹார, தெவனகல விஹார, குரகல விஹார போன்றவை முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படுள்ளன என்பதேயாகும். இதன் பின்னனி பற்றிய எந்தவித‌ தெளிவுமின்றி திருவுபடுத்தப்பட்ட செய்திகள் மற்றும் இனவெறிவை தூண்டும் வார்தைகளின் ஊடாகவும் சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக‌ திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருகின்றனர். இதன் பின்னியில் நியாயங்கள் இருப்பின் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, இவர்கள் முஸ்லிம்களை பற்றிய தவரானதொரு க‌ண்ணோட்டத்தை சிங்களவர்கள் மத்தியில் தோற்றுவிப்பதற்கு காரணம் என்ன?

இது மாத்திரமன்றி தற்போது எம்மை சுற்றி நிகழும் மோசமான நிகழ்கவுகளை கூட மதங்களுடன் சம்பந்தம் செய்து, பெருமாண்மையின மக்களை முஸ்லிம்கள் மீது ஏவி விடுதவதற்காக‌ தகவல்களை திரிவு செய்து பரவவிடும் இழி செயல்களை இவர்கள் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் ஊடாக செய்து வருகின்றமையை காண முடிகின்றது. இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலரே அன்றி முழு முஸ்லிம் சமூகமும் அல்ல. இதற்காக வேண்டி இன்று அனைத்து முஸ்லிம்களையும் எதிரிகளாகப் பார்க்கும் விடயம் வேதனைக்குரியது. இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் கொலை, பஸ்ஸர மற்றும் பலபிடிய சம்பவங்களை மதங்களுடன் தொடர்பு செய்து முஸ்லிம் அல்லாதோரை இஸ்லாம் கொலை செய்யத் தூண்டுவதாகவும், இவை அதன் ஆரம்பம் எனவும் ஒரு குழு பாரியதொரு பிரச்சார நடவடிக்கைகளை முஸ்லிம்களுக்கு எதிராக இன்றும் மேற்கொள்கின்றது. இதனூடாக இவர்களின் பெருமான்மையின மக்களை முஸ்லிகளுக்கு எதிராக தூண்டிவிடும் எண்ணம் நன்கு புலணாகின்றது.

அண்மைக் காலமாக இலங்கையின் பிரதான ஊடகங்க‌ளான திவயின, மவ்பிம, லங்கா சீ நிவ்ஸ், மற்றும் ராவய இணையத்தளங்களில் முஸ்லிககளை மிக மோசமாக சித்தரிக்கும் செய்திகளை தொடந்து வெளியீடு செய்துவருவதை நாம் காணலாம். இது போன்ற‌ மோசமான சித்தரிப்புகள் மூலம் பெருமாணமையின மக்களை அச்சம் கொள்ளசெய்வதுடன், முஸ்லிம்களது உணர்ச்சிகளை தூண்டிவிட்டு மீண்டுமொரு பதட்ட‌ நிலையை இலங்கையில் உருவாக்குவத்ற்கு இந்ந ஊடகங்களும் துணைபோவது கவலைக்குறிய விடயமாகும்.

இன்று இவர்கள் பல இணையத்தளங்களை இஸ்லாத்தை தவறாக சித்தரிப்பதற்கும், முஸ்லிம்களை இழிவு செய்வதற்காக‌வும் முஸ்லிகளது பெயர்களிளே நடாத்தி வருகின்றனர். அவைளினூடாக அல்லாஹ், அல்-குர்ஆன் மற்றும் நபி அவர்களை மிகவும் தாழ்வாகவும் மோசமாக சித்தரிப்பதன் ஊடாக முஸ்லிம்களை தூண்டிவிடுவது மாத்திரமன்றி சிங்கள மக்களிடம் தவரானதொரு கண்ணோட்டத்தை தோற்றுவிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இவர்களது முக்கிய குறிக்கோள்களில் ஒன்று முஸ்லிகளை பொருளாதார ரீதியாக வீழ்த்தி மிகவும் பலவீனமானதொரு சமுகமாக மாற்றுவதாகும் . இதற்காக அண்மைக் காலங்களில் முஸ்லிம்களது வியாபார, பொருளாதார நடவடிக்கைகளை சீர்குளைக்கும் முகமாக பல போலியான குற்றச்சாட்டுகள், இனவாதத்தை தூண்டும் பிரசாரங்கள் என‌ நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்திக் கொண்டிருப்பதை எம்மால் காண முடிகின்றது.

முஸ்லிகள் மிகவும் அவதனமாக இருக்க‌ வேண்டிய முக்கிய‌ காலகட்டம் இதுவாகும். இவர்களாவே சில போலியான நாடகங்களை திட்டமிட்டு முஸ்லிம்களின் பெயர்களில் அரகேற்றி வருகின்றனர். அண்மையில் முஸ்லிகளின் ஜிஹாத் அமைப்பு மூலம் சுமன ஹிமி அவர்களுக்கு கொலை மிரட்டல் என்ற செய்தியை அனைத்து ஊடகங்களிலும் எம்மால் காணமுடிந்தது. இத‌னூடாக பாரதூரமான விளைவுளை, தவரான எண்ணங்களை தோற்றுவிப்பதுடன் அதன் பிரதிகூலங்களை முஸ்லிம்கள் மீது தினிபதற்கு முயற்சி செய்து வருகின்றனர். வருந்தத் தக்க விடயம் என்னவெனில் இது போன்ற செயற்பாடுகளுக்கு பிரதான ஊடகங்களும் துணை செல்வதாகும்.

இவைகளினுடாக ஒரு திட்டமிட்ட குழு அரசியல், ஊடகங்கள் என பலமான பின்னனியுடன் முஸ்லிகளுக்கு எதிராக செயற்படுவதனை எவ்வித ஐயமுமின்றி உறுதி செய்யலாலம். இவர்களது இவ்வாறான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் மிகவும் சிறிதாக எண்ணும் விடயங்கள் கூட இனிவரும் காலங்களில் மிகப் பெரிய கலவரங்களாகக் மாறலாம். இவர்களது செயற்பாடுகளை பற்றி கூறுவதென்றால் இலங்கையில் பல்கலைகழகம், தகம் பாசல், பிரதேச ரிதியாக விளிப்புணர்வு என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் பிரசாரங்ளை செய்து வருகின்றனர். அவையாவன நாம் மேலே கூறியது போன்று இஸ்லாம் தீவிரமானது, முஸ்லிம் அல்லாதோரை கொலை செய்யத் தூண்டுகிறது. முஸ்லிம்கள் பௌத்தர்களது வரலாற்று பிரதேசங்களை ஆக்கிரமிக்கிறனர் போன்றனவே ஆகும்.

இன்னும் முஸ்லிகளுக்கு எதிராக காணப்படும் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளை மேற்கொள்வது, அவர்களது உதவிகளை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது, முஸ்லிகளுக்கு எதிராக இணையத்தளங்களில் காணப்படும் தவரான தகவல்களை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து பிரச்சாரம் செய்வது என தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருகின்றனர்.

இன்று முஸ்லிகளுக்கு எதிராக ஊடகங்களால் வெளியிடப்படும் ஆதாரமற்ற செய்திகள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். குரகல, தெவனகல, மற்றும் முகுது விஹார பற்றிய விடயங்கள் ஆராயப்படுவதுடன் இனவாத‌த்தை தூண்டும் பிரசாரங்ளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள‌ வேண்டும். இது போன்ற விடயங்களில் ஒரு சில முஸ்லிம்கள் தவறு செய்திருப்பின் அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அனைத்து முஸ்லிம்களும் தயாராக வேண்டும் ஒரு சிலர் செய்யும் தவறுகளை மதங்களுடன் தொடர்பு செய்து பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் இலங்கையில் மீண்டுமொரு பதட்ட நிலை வெகுவிரைவில் உருவாகலாம்.

அன்பான முஸ்லிம் சகோதர்களே எம்மிடமும் பல தவறுகள் காணப்படுகின்றன. எம்மில் பலர் முஸ்லிம் என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய எந்த வித தெளிவுமின்றி வாழ்ந்து கொண்டிருகின்றோம். எமது முன்மாதிரியற்ற செயற்பாடுகளே இவர்களிடம் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் தோன்ற மிக பிரதான காரணியாகும். இலங்கையர்கள் என்றி பீற்றிக் கொள்ளும் நாங்கள் எமது அண்ணிய சகோதர்கள் இஸ்லாத்தை கற்றுக் கொள்வதற்கு என்ன வசதிகளை செய்துள்ளோம்? இவர்கள் இஸ்லாத்தை கற்றுக் கொள்வதற்காக சிங்கள மொழியிளான பரிபூரண இணையத்தளங்கள் எத்தனை உள்ளன? சிங்கள மொழி மூலம் குர் ஆனை கற்றுக் கொள்வதற்காக இணையத்தளங்களில் எம்மால் என்ன வசதிகள் செய்யப்ப‌ட்டுள்ளன? சில தீய சக்திகளின் இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாமும் எமது அலட்சியங்கள் ஊடாக இலகுவாக வழி அமைத்துக் கொடுகின்றோம். எம்மிடம் சிறந்த வளங்கள் இன்மையே இவர்களது தவரான பிரச்சாரங்களின் எழுச்சிக்கு மிக முக்கிய காரணி என்பது கசப்பான உண்மையாகும். முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்வதற்காக எம்மால் எந்தவித ஒழுங்கான வழிமுறையும் செய்யப்படவில்லை. இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம் நிறுவனங்களை நிறுவகிக்கும் தலைமைகள் இது சம்பந்தமான தீர்க்க‌மான முடிவுகள் எடுப்பதுடன் அவைகளை கூடிய சீக்கிரம் நடைமுறைபடுத்த வேண்டும்.

எமது உறங்கிக் கொண்டிருக்கும் சுயநல அரசியல்வதிகள் கூட்டம் ஒரு சிலரால் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கபடும் திட்டங்கலுக்கு எதிராக சட்ட ரீதியான‌ நடவடிக்கைள் எடுக்க முன்வர வேண்டும். தமது சுய இலாபங்களை மறந்து அனைவரும் செயற்படாத வரை ஒரு பலமான முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்புவது கடினமாகும்.

இலங்கையின் வரலாற்றில் 1915 கலவரம், ஜுலை கலவரம், 30 வருட யுத்தம் போன்ற கறும் சுவடுகளை கொண்டிருக்கும் நாம் மீண்டுமொரு இனவாத ரீதியான வரலாற்று சுவடுகளை பதிவு செய்து கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கிய தருணம் இதுவாகும். இலங்கை சர்வாதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கும் இச் சந்தர்பத்தில் சில விஷமிகள் இலாபம் காண முற்படுகின்றனர். எனவே இது நாம் அனைவரும் அவதானத்துடன் நடந்து கொள்ளவேண்டிய ஒரு இக்கட்டான கால கட்டமாகும்.

இனமத பேதமின்றி ஒரு அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப முஸ்லிகள் ஆகிய நாமும் உறுதுணையாய் இருப்போம்.

2 கருத்துரைகள் :

Unknown said...

w.good masa allah unkalucku janathul pir thaus kadicka vandum

Anonymous said...

தவறான செய்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க அரசை எமது அரசியல் தலைவர்கள் தூண்ட வேண்டும் .
முஸ்லிகளுக்கு என்று தனி ஊடகம் அவசியம் .எல்லோரும் சிந்திக்க வேண்டும்

Post a Comment

Flag Counter

Free counters!