எகிப்திய
ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு
வருகின்றன. மொத்தமுள்ள தேர்தல் தொகுதிகளில் அரைவாசி
தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் உத்தியோக பற்றற்ற முறையில் தற்போது வெளிவந்துள்ளன.
இதன்
பிரகாரம் இஹ்வான்களது வேட்பாளரான கலாநிதி முஹம்மத் முர்ஸி 30.8 வீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில்
உள்ளார். இவர் கடைசிக் கட்டத்தில் களம் இறங்கியவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
முபாரக்கின்
கடைசிக் காலகட்டப் பிரதமரான அஹ்மத் ஷபீக் 22.3
வீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் நிலையில்
உள்ளார். ஆளும் இராணுவ சபை இவருக்கு
ஆதரவளிப்பதாக
செய்திகள் வெளிவந்திருந்தன.
மூன்றாம்
நிலையில் புரட்சி ஆதரவாளரான இடதுசாரி நாஸரிய்ய சிந்தனைப் போக்குடைய ஹம்தீன் ஸபாஹி 20 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர்
எதிர்பாராத நிலையில் மூன்றாம்
நிலைக்கு முன்னேறி இருப்பது கவனிக்கத்தக்கது.
இஹ்வான்களிலிருந்த
பிரிந்து போன, ஸலபிக்களின் ஆதரவைப்
பெற்ற அப்துல் முன்இம் அபுல்
புத்தூஹ் நான்காம் நிலையில் 17 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அம்ர்
மூஸா ஐந்தாம் நிலைக்கு பின் தள்ளப்பட்டுள்ளார். இவர் 11 வீத வாக்குகளையே பெற்றுள்ளார். இவர்
முன்னிலையில் இருப்பதாக எகிப்திய ஊடகங்கள் பொய்யான
கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான
தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
1 கருத்துரைகள் :
"Entre unos y otros, "la casa sin barrer".
Post a Comment