animated gif how to

கொழும்பிலுள்ள பள்ளிவாசல் தப்பியது..!

May 18, 2012 |

-நவமணி-
கொழும்பு - 7 புளர்ஸ் வீதி எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் உள்ள இடத்தையும் ரஷ்ய தூதுவராலயத்துக்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தனக்கு ஆலோசனை தெரிவித்த போதும் பள்ளிவாசலை ஒதுக்கி விட்டு எஞ்சிய நிலப்பரப்பையே ரஷ்ய தூதுவராலயத்துக்கு வழங்க பணிப்புரை வழங்கியதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் புளர்ஸ் வீதிப் பள்ளிவாசலுக்கு பௌத்த பிக்குகள் எனக் கூறிக் கொண்டு காவி அணிந்து இருவர் வந்து சென்றது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்றத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்த்ன மற்றும் சிரேஷ்ட அமைச்சர் டி.யு. குணசேகரவின் கவனத்துக்கு கொண்டு வந்த போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அமைச்சராக நான் இருக்கும்போது புளர்ஸ் வீதியில் ரஷ்ய தூதுவராலய நிர்மாணத்திற்காக வழங்கப்பட்டுள்ள காணியைப பார்வையிடச் சென்றபோது அதிகாரிகள் முதலில் என்னை பள்ளிவாசலிருக்கும் இடத்துக்கே அழைத்துச் சென்று பள்ளிவாசல் இருக்கும் இடத்தை உள்ளடக்கி காணியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்கள்.

ஆனால் பள்ளிவாசலை அப்படியிருக்க அனுமதிக்குமாறு நான் உத்தரவு வழங்கினேன் என்றும் அமைச்சர் தெரிவித்ததாக அல்ஹாஜ் அஸ்வர் நவமணிக்குத் தெரிவித்தார்.

1 கருத்துரைகள் :

sufsuf said...

பௌத்த துறவிகள் பஞ்சசீல கொள்கைகளை கைவிட்டு,பஞ்சதந்திரங்கள் மூலம் பள்ளிவாசல்களை கபளீகரம் செய்ய முனைகின்றனரோ?

Post a Comment

Flag Counter

Free counters!