animated gif how to

தம்புள்ள மஸ்ஜித் - தனது அறிக்கை தொடர்பில் மனம் வருந்துகிறார் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா!

April 24, 2012 |

F.M.பர்ஹான்
தம்புள்ளை மஸ்ஜித் தொடர்பான தனது செய்தியில்  தவறான உனர்வுகள் சிந்தனைகள் ஏற்பட்டிருந்தால் அதற்காக பிரதியமைச்சர் தான் மனம் வருந்துவதாக தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரரை சந்தித்த பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். கண்டனங்கள் எழுந்தன இந்த கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்கா ஆகியன வன்மையான கண்டனத்தை தெரிவித்துவிளக்கம் கோரியிருந்தன ..
அறிக்கை : ‘தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் இரண்டு தரப்புக்கள் இடையில் ஒருசுமுகமான நிலைஏற்படுத்துவதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் பள்ளிவாசல் இடித்து தகர்க்கப்பட்டது என்று பல சகோதர ஊடகங்களும், முஸ்லிம் ஊடகங்களும் பொய்யான செய்திகளை பரப்பிவருகிறது. எனவே இது தொடர்பாக ஒரு சிங்கள ஊடகம் ஒன்று இப்பள்ளிவாசல் உடைத்து நொறுக்கப்பட்டது தொடர்பாக தங்களது கருத்து என்ன என்று சிங்களத்திலே கேட்டகேள்விக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா சிங்களத்திலேயே பதில் அளித்தபோது, பள்ளிவாசல் இடித்து நொறுக்கப்படவில்லை என்ற செய்தியை அவர் சொன்னார்.
ஆனால் உண்மையிலே அந்தப் பள்ளிவாசல் பௌத்த மதகுருதலமையில் வந்தகுழுவினால் தாக்கப்பட்டது, அங்கிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டது.ஆனால் பள்ளிவாசல் இடித்து நொருக்கப்படவில்லை என்ற செய்தியைத்தான் அவர் சொன்னார். ஊடகங்கள் அச்செய்தியினை திரிவுபடுத்தி வெளியிட்டிருந்தது.
எனவே இது தொடர்பாக ஏதாவது தவறான உனர்வுகள் சிந்தனைகள் ஏற்பட்டிருந்தால் அதற்காக பிரதியமைச்சர் தான் மனம் வருந்துவதாக பிரதியமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

2 கருத்துரைகள் :

Anonymous said...

Okay Okay

Anonymous said...

poi haran.mathi matthi pesuran

Post a Comment

Flag Counter

Free counters!