துருக்கி பாராளுமன்ற எம்.பியான ஆரிப் அல்பராக்
என்பவர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திற்கு கழுதை மீது ஏறி வந்தார்.
படிப்படியாக எரிபொருள்
விலை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாததை
கண்டித்து ரிபப்ளிகன் டர்க்கிஷ் பார்டி உறுப்பினரான அல் பராக் வித்தியாசமான
நடவடிக்கையை மேற்கொண்டார்.
எண்ணெய் விலையை
கட்டுப்படுத்த பாராளுமன்றத்தில் வலுவான கோரிக்கை எழுந்துள்ள சூழலில், அமைச்சர்களுக்கு புதிய கார்களை வாங்குவதற்கான
அரசின் தீர்மானம் எதிர்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
எரிபொருள் மற்றும்
மண்ணெயின் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் தொடரும் என்று பராக்
பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பராக் தெரிவித்தார்.
செய்தியாளர்களை
சந்தித்த பிறகு அவர் தனது கழுதையிலேயே திரும்பினார். கழுதையின் கழுத்தில் நம்பர்
ப்ளேட் தொங்கவிடப்பட்டிருந்தது.
0 கருத்துரைகள் :
Post a Comment