-எம்.ஏ.எம்.நிலாம்-
இதேவேளை இப்பள்ளிவாசலை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் திட்டமானது உள் நோக்கத்தைக் கொண்டது எனவும் எதிர்காலத்தில் நாட்டில் முஸ்லிம்கள் வாழும் ஏனைய பிரதேசங்களும் இத்தகைய நிலையை எதிர் கொள்ள நேரிடலாம் எனவும் சந்தேகம் உருவாகியுள்ளது. எனவே தான் அரசாங்கத்தின் இத் திட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக முஸ்லிம் சமூகம் தெரிவித்துள்ளது.
இப்பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
தம்புள்ளயில் பௌத்தர்கள் உரிமை
கொண்டாடும் புனித பூமிக்கு அப்பால் பிரிதொரு இடத்தில் காணி ஒதுக்கப்பட்டு 6 மாதங்களுக்கு
இடையில் புதிதாக பள்ளிவாசல் கட்டித் தரப்படும் எனவும் உடனடியாக முஸ்லிம்கள்
அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் பிரதமர் டி.எம்.ஜயரட்ண முஸ்லிம்
தரப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா அவசரக்கூட்டம் ஒன்றை அதன் தலைமையகத்தில் கூட்டியது. இதில் முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாற்றிடத்தில் புதிய பள்ளிவாசல்
கட்டித் தரப்படும் என்ற அரசாங்கத்தின் யோசனையை இக்கூட்டம் முற்றாக
நிராகரித்துள்ளது. வேண்டுமானால் பள்ளிவாசலை உடைத்து தரை மட்டமாக்குங்கள் ஆனால் நாம்
வேறிடத்துக்கு செல்லத் தயாராக இல்லை என்ற உறுதியான முடிவை எடுத்துள்ளனர்.
இதேவேளை இப்பள்ளிவாசலை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் திட்டமானது உள் நோக்கத்தைக் கொண்டது எனவும் எதிர்காலத்தில் நாட்டில் முஸ்லிம்கள் வாழும் ஏனைய பிரதேசங்களும் இத்தகைய நிலையை எதிர் கொள்ள நேரிடலாம் எனவும் சந்தேகம் உருவாகியுள்ளது. எனவே தான் அரசாங்கத்தின் இத் திட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக முஸ்லிம் சமூகம் தெரிவித்துள்ளது.
இப்பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment