ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமிச்சருமான் ரவூப்
ஹக்கீம் நேற்று (22.04.2012) தம்புள்ள
பிரதேசத்க்கு சென்று அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ்
அதிகாரிகளையும் சிங்கள மக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளார்.
தன்புள்ள
மஸ்ஜிதுக்கு சென்று அங்கு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் பிரதேசத்தின்
நகர எதிர் கட்சி தலைவர்
உட்பட ஐம்பது வரையான சிங்கள மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதன்
போது மஸ்ஜித் இருக்கும் காணி சட்ட ரீதியானது என்றும் அந்த காணி விகாரைக்கு உட்பட்ட
காணியில் இல்லை என்றும் சட்ட ரீதியான வரைபட ஆதாரங்களை
காண்பித்து சிங்கள எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் விளக்கம் அளித்ததுடன் அங்கு
வந்திருந்த சிங்கள் மக்கள் சிலர் விகாரையால் அழைக்கப்பட்ட எந்த கூட்டத் திற்கும்
தாம் போகவில்லை என்றும் பள்ளி தமது முன்னோர்கள் காலத்தில் இருந்து இயங்கி
வருவதாகவும் கருத்து தெரிவித்ததுடன்
அங்கு
வந்திருந்த அனைத்து சிங்க மக்களும் மஸ்ஜிதுக்கு நிகழ்த்த சம்பவத்திற்கு ஆழ்த்த
கவலையை தெரிவித்துள்ளனர் அத்துடன் மஸ்ஜித் தொடர்ந்தும் இயங்குவதற்கான தமது
ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment