சற்று நேரத்திற்கு முன் (02.15) இலங்கையின் பல
பாகங்களிலும் சிறியளவிளான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை, ஓட்டமாவடி, கிண்ணியா உள்ளிட்ட பிரதேசங்களிலும் இந்த பூமியதிர்வு உணரப்பட்டுள்ளது. இதேவேளை இந்தோனேசியா சுமாத்ரா தீவிற்கு அருகில் 08.07 ரிச்டர் அளவில் பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதுடன் குறித்த பூமியதிர்வு இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்டதன் தாக்கம்தான் இலங்கையிலும் உணரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாலை 4.00 மணியளவில் இதன் தாக்கம் இலங்கையில் உணரப்படலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
___

இந்தோனேசியா மற்றும் 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்
இலங்கையில் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக
இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் வேண்டுகோள்
விடுத்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்டதன் தாக்கம்தான் இலங்கையிலும் உணரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாலை 4.00 மணியளவில் இதன் தாக்கம் இலங்கையில் உணரப்படலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
___
RSS Feed
April 11, 2012
|

0 கருத்துரைகள் :
Post a Comment