பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பிரெஞ்சு
சோஷலிச கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய ஜனாதிபதி சர்கோஸி
இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸியின் பதவிக்காலம் விரைவில்
முடிவடையவுள்ளது. இதனையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், சர்கோஸி மற்றும் பிரெஞ்ச் சோஷலிச கட்சி
வேட்பாளர் பிராங்காய்ஸ் ஹோலாண்ட் உட்பட 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பிரான்ஸ் காலனி ஆதிக்கம் இருந்த நாடுகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுச்சேரி,
காரைக்கால் மற்றும்
சென்னையில் 6
இடங்களில்
வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதற்கட்டமாக நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.
இதில், பிரெஞ்சு சோஷலிய கட்சி வேட்பாளர் 28 புள்ளி 6 சதவீத வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி, 27 சதவீத இடங்கள் பெற்று இரண்டாம் இடத்திற்கு
தள்ளப்பட்டார். இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment