தம்புள்ள
மஸ்ஜித் தொடர்பாக எழுந்துள்ள பதற்ற நிலையை தணிப்பதற்காக சர்வமதத் தலைவர்களைக்
கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று திங்கள் கிழமை தம்புள்ளையில் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ள மாநகர சபையின் மேயர் ஜாலிய ஒபாத்த தெரிவித்துள்ளார்.
இந்த
ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் மதத் தலைவர்கள் அஸ்கிரிய மாநாயக்க தேரர் , புத்த சாசன
திணைக்கள செயலாளர் ,கலாசார
அமைச்சின் செயலாளர் தம்புள்ள விகாராதிபதி மற்றும் அரசியல்வாதிகள் பிரதேச செயலாளர்
இந்த கூட்டத்தில் எழுதுள்ள பிரச்சினைகள் குறித்து உரிய வகையில் இவ் ஆலோசனைக்
கூட்டத்தில் ஆராயப்பட்டு இந்த பிரதேச முஸ்லிம்கள் உரிய வகையில் தங்கள் பள்ளிவாசல்
சமைய விவகாரங்களை முன்னெடுத்து செல்ல வசதியாக மாற்று நடவடிக்கை எடுக்க
எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும்
இன்று 3
மணியளவில்
இடம்பெறும் என்று எதிர்பார்க்கப் படும் கூட்டத்தில் தம்புள்ளை ஹைரிய ஜும்ஆ
பள்ளிவாசல் நிர்வாகம் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் வழிகாட்டலுக்கு அமைவாக
குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் அதிகாரத்தை பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment