animated gif how to

தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலில் இன்று ஜும்ஆ தொழுகை நடைபெற்றது (படங்கள் இணைப்பு)

April 27, 2012 |

ஜும்மாத் தொழுகையை நடத்த விடாது தடுக்கப்பட்ட தம்புள்ளை மஸ்ஜிதுல் கைரியா ஜும்மாப் பள்ளிவாயலில் இன்று எவ்வித பிரச்சினையுமின்றி ஜும்மாத் தொழுகை நடத்தப்பட்டுள்ளது. 

வழமையை விட இந்தப்பள்ளிவாயலில் ஜும்மாத் தொழுகைக்காக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் எவ்வித பிரச்சினைகளுமின்றி ஜும்மா நடைபெற்றதுடன் ஜும்மாவின் பின்னர் பிரார்த்தனையும் நடைபெற்றது.  வீதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று மஸ்ஜிதுக்கு சர்வதேச மற்றும் தேசிய ஊடங்கள் வந்திருந்தது. அல் ஜசீரா தொலைகாட்சி ஊடகவியலாளர்கள் காட்டார் நாட்டில் இருந்து வந்திருந்தனர்.

அவர்களில் மூன்று அரபிகளும் இருந்தனர். அவைகள் மஸ்ஜித் இமாம் உட்பட அங்கு வந்திருந்த வர்களிடம் பேட்டி கண்டனர். மற்றும் குவைத் நாட்டில் இருந்தும் ஊடகவிலாளர்கள் வந்திருந்தார் மொத்தமாக சுமார் பத்துக்கும் அதிகமான ஊடக துறை சாந்தவர்கள் இன்று இடம்பெற்ற ஜும்ஆ வை உள்வாங்கி கொண்டதுடன் தகவல்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!