animated gif how to

அனாதைகள், அனாதரவான குழந்தைகளை பதியும் நடவடிக்கை - ஜம்இய்யதுல் உலமா அணுசரணை

March 07, 2012 |


இலங்கையிலுள்ள அனாதைக் குழந்தைகளுக்கு உதவி செய்கின்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினதும் அணுசரணையுடன் அனாதைகளை பராமரிக்கும் நிறுவனங்களின் ஒன்றியம் என்ற ஒன்றியத்தை உருவாக்கியுள்ளனர்.

இலங்கையில் உள்ள அனாதைகள் மற்றும் அனாதரவான குழந்தைகளு உதவி செய்யும் நோக்கில் இவ்வொன்றியமானது அனாதைகள் மற்றும் அனாதரவான குழந்தைகள் பற்றிய தகவல் நாடளாவிய ரீதியில் சேகரிக்க தாயாராகியுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக அனாதைக் குழந்தைகளை பதிவுசெய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனாதைகளைப் பராரிப்பவர்களும் நானும் இவ்வாறாக இருப்போம் என தனது சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து நபி (ஸல்)அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

எனவே அனாதைகள் பற்றிய தகவலரிந்தோர் அவர்களை பதிவுசெய்வதற்கு உதவிபுரியுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

விண்ணப்பப்படிவம் பூர்த்திசெய்யப்பட வேண்டிய ஒழுங்கு:

1.ஒரு குழந்தைக்கு ஒரு விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
2.குழந்தையின் தாய்க்கான (விதவை) விண்ணப்பப்படிவம் பூர்த்திசெய்யப்படல் வேண்டும்.
3.தாயிடம் இரண்டு அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
4.குழந்தையின் விண்ணப்பப்படிவத்துடன்: குழந்தையின் பிரப்பத்தாட்சிப் பத்திரம், தந்தையின் இறப்பத்தாட்சிப் பத்திரம், குழந்தையின் புகைப்படம் என்பன இணைக்கப்படல் வேண்டும்.

தாயின் விண்ணப்பப்படிவத்துடன் தாயின் தேசிய அடையாள அட்டையின் பிரதி இணைக்கப்படல் வேண்டும். விண்ணப்பப்படிவங்களை புத்தளம் பெரிய பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

Orphans Sponsorship Consortium (C.S.O)
P.O.Box: 134
Dehiwala

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!