பங்களாதேஷில் சவூதி அரேபியா நாட்டின் தூதரக அதிகாரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
டாக்காவில் சவூதி அரேபியாவின் தூதரகத்தில் அதிகாரியான கலஃப் அல் அலி(வயது 46) என்பவர்தாம் சுட்டுக் கொல்லப்பட்டவர்.
குல்ஷன் மாவட்டத்தில் கலஃபின் வீட்டிற்கு முன்பு அவருடைய உடலை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவத்தின் பின்னணி குறித்து தெரியவில்லை. தூதரக அதிகாரியின் மரணத்தை சவூதி அரேபியா உறுதிச்செய்த போதிலும் விளக்கத்தை வெளியிடவில்லை.
பங்களாதேஷிற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளில் முன்னணியில் உள்ள சவூதி அரேபியா, அந்நாட்டின் நெருங்கிய நட்பு நாடாகும். சவூதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பங்களாதேஷ் குடிமக்கள் பணியாற்றுகின்றனர்.
RSS Feed
March 07, 2012
|





0 கருத்துரைகள் :
Post a Comment