இந்தோனேஷியாவின் ஆச்சே மாநிலத்தில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள
பிராந்திய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், இஸ்லாமிய ஷரீஆவை தமது முக்கிய பிரச்சாரமாக எடுத்துள்ளனர். சுமாத்திரா
தீவின் வடக்கே அமைந்துள்ள ஆச்சேயில் ஏப்ரல் 9 ஆம் திகதி
புதிய ஆளுனரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்தோனேஷியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக மாற வேண்டும் என்ற கோரிக்கையை ஆச்சே பிரிவினைவாதிகள் முன்வைத்தனர்.
எனினும், தற்போது விரிவான தன்னாட்சி அதிகாரங்கள் அதற்கு வழங்கப்பட்டுள்ளது. 2001 இல் மத்திய அரசுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரமே இது அமுலுக்கு வந்துள்ளது.
ஆச்சேயில் ஷரீஆ படிப்படியாக
அமுல்படுத்தப்படுகிறது. இங்கு இஸ்லாமிய சட்டங்களை அவதானிப்பதற்கான தனியான
பொலிஸாரும் உள்ளனர்.
RSS Feed
March 27, 2012
|




0 கருத்துரைகள் :
Post a Comment