animated gif how to

ஐ.நா. பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு வெற்றி!

March 22, 2012 |

இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தீர்மானம் தொடர்பில் இன்று நடந்த வாக்கெடுப்பில் 24 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்தன: 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

47 நாடுகள் கொண்ட மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய நாடுகள், இந்தத் தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும் இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்றும் வாதிட்டன.

ஆனால், போர்க்காலத்தில் இரு தரப்பினரும் புரிந்த குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறுவதன் மூலமே போருக்குப் பின்னரான இலங்கையில் நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தீர்மானத்தை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்குவாடோர், இந்தோனேசியா, குவைத் மாலைத்தீவு, மைவுரிடானியா, பிலிபைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பெனின், கெமரூன், சிலி, கொஸ்டரீக்கா, செக் குடியரசு, கோத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிடஸ், மெக்சிகோ, நைஜீரியா, நோர்வே, பெரு, போலந்து, மோல்டோவா, ரோமானியா, ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, உருகுவே.
வாக்களிக்காத நாடுகள்:
அங்கோலா, போர்சுவானா, பேர்கினா பசோ, ஜிபூடி, ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல். 


.ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணையை வீடியோ.. Video

.பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகளும் வாக்குகளை பயன்படுத்தாத நாடுகளும்

Y-ஆம் ,N-இல்லை ,Abt-வாக்களிக்க வில்லை:

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!